×

உஷார் !ஊடகத்தில் உங்க போட்டோ இருக்கா ?-போட்டோவையும் போன் நம்பரையும் ஆபாச தளத்தில் விட்டு பணம் பறிக்கும் கும்பல் -கதறும் கோடீஸ்வரர் ..

மும்பையில் ஒரு பிரபலமான தொழிலதிபர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களின் போட்டோவை ஊடகத்திலிருந்து திருடி ,அதை கண்ட கண்ட வெப்சைட்டில் போட்டு ,அதை நீக்க பல்லாயிரம் ரூபாய் பணம் கேட்டு ஒரு கும்பல் மிரட்டியுள்ளது . தெற்கு மும்பையில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு புதன்கிழமை எஸ்கார்ட் இணைய சேவையிலிருந்து ஒருவர் போன் செய்து அதிலிருக்கும் உங்களை பற்றிய தகவலுக்கு உடனே சேவை கட்டணம் செலுத்துமாறு கேட்டனர் .அதற்கு அவர் தான் அந்த வெப்சைட்டில் எனது தகவலை தரவில்லை என்று
 

மும்பையில் ஒரு பிரபலமான தொழிலதிபர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களின் போட்டோவை ஊடகத்திலிருந்து திருடி ,அதை கண்ட கண்ட வெப்சைட்டில் போட்டு ,அதை நீக்க பல்லாயிரம் ரூபாய் பணம் கேட்டு ஒரு கும்பல் மிரட்டியுள்ளது .

தெற்கு மும்பையில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு புதன்கிழமை எஸ்கார்ட் இணைய சேவையிலிருந்து ஒருவர் போன் செய்து அதிலிருக்கும் உங்களை பற்றிய தகவலுக்கு உடனே சேவை கட்டணம் செலுத்துமாறு கேட்டனர் .அதற்கு அவர் தான் அந்த வெப்சைட்டில் எனது தகவலை தரவில்லை என்று கூறி போனை வைத்துவிட்டார் .
உடனே சிறிது நேரம் கழித்து அவரின் போனுக்கு ஒரு வீடியோ லிங்க் வந்துள்ளது .அதை அவர் க்ளிக் செய்தபோது ஒரு வெப்சைட்டில் அவரின் குடும்ப உறுப்பினர்களின் ஆபாச போட்டோக்கள் போன் நம்பருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் .


பிறகு ஒருவர் அந்த தொழிலதிபருக்கு போன் செய்து, இந்த ஆபாசவெப்சைட்டிலிருந்து தங்கள் குடும்ப ஆபாச போட்டோக்களை எடுக்க 50000ரூபாய் கேட்டுள்ளனர் .அதற்கு பணிந்த அவர் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பிவைத்துள்ளார் .ஆனால் அவர்கள் மீண்டும் போன் செய்து மறுபடியும் அதிக பணம் கேட்டு அவரை மிரட்டியுள்ளனர் .இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ,வியாழக்கிழமை மலபார் மலை போலீஸை அணுகி அடையாளம் தெரியாத அவர்கள் மீது புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அவர்கள் மீது ஐபிசி பிரிவு 420 (மோசடி), 384 (மிரட்டி பணம் பறித்தல்) மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் பதிவு செய்துள்ளனர் .