×

“லட்சணமா இருந்தா லட்சக்கணக்குல சம்பளம்” -விமானத்துல வேலைகொடுக்கிறோம்னு பல லட்சம் மோசடி

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றிய ஒரு கூட்டத்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தார்கள் . உ.பி .யின் நொய்டாவில் மாலிக் என்பவர் குமுத்ராஜன், கமலேஷ் மற்றும் பிரியங்கா கோஸ்வாமி ஆகியோருடன் சேர்ந்து ஒரு இணைய தளத்தில் ஒரு விளம்பரம் கொடுத்தார் .அதன்படி அழகான பெண்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி தருவதாகவும் விளம்பரம் தந்தார்கள் .அந்த விளம்பரத்தை
 

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றிய ஒரு கூட்டத்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தார்கள் .

உ.பி .யின் நொய்டாவில் மாலிக் என்பவர் குமுத்ராஜன், கமலேஷ் மற்றும் பிரியங்கா கோஸ்வாமி ஆகியோருடன் சேர்ந்து ஒரு இணைய தளத்தில் ஒரு விளம்பரம் கொடுத்தார் .அதன்படி அழகான பெண்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி தருவதாகவும் விளம்பரம் தந்தார்கள் .அந்த விளம்பரத்தை பார்த்து விட்டு ஏரளமான பெண்கள் பணிப்பெண் வேலைக்கும் ,ஏரளமான் ஆண்கள் விமானத்திலிருக்கும் மற்ற வேலைக்கும் மனு செய்தார்கள் .
அந்த மனுக்களை பார்த்து விட்டு அவர்கள் அனைவரையும் மாலிக் ஒருநாள் தன்னுடைய அலுவலகத்துக்கு வர சொன்னார் .அப்போது அவர்களிடம் வேலைக்கான சீருடை மற்றும் பாதுகாப்பு தொகையாக ஒவ்வொருவரிடமும் கிட்டத்தட்ட 71000 ரூபாய் வசூல் செய்தார் .அவரை நம்பி பலர் பணம் கட்டினார்கள் .


பிறகு பணம் கட்டிய எவருக்கும் எந்த வேலைக்கான உத்தரவும் வழங்காமல் இருந்துள்ளார்கள் .இதனால் கோபமுற்ற ஒரு பெண் அவர்களின் ஆபிசுக்கு நேரில் சென்று கேட்ட போது அவர்கள் முறையாக எந்த பதிலும் சொல்லவில்லை .இதனால் அந்த பெண் போலீசில் புகார் கூறினார் . அப்போது போலீசில் அந்த பெண் அளித்த புகாரில் தான் சொமட்டோ நிறுவனத்தில் வேலையிலிருந்ததாகவும் ,இந்த ஊரடங்கால் வேலையிழந்ததால் வேறு வேலை தேடிய போது இந்த மோசடி கும்பலிடம் சிக்கியதாக கூறினார் .அவரின் புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து மாலிக் மற்றும் அவரின் கூட்டாளிகளை கைது செய்தனர் .மேலும் அவர்களின் வங்கியிலிருந்த 60 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் மீட்கப்பட்டது