×

கொரோனா பயம்… பஸ்ஸில் இருந்து வீசப்பட்ட பெண் மரணம்! – ஒரு மாதம் கழித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்

டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு பஸ்ஸில் சென்ற பெண் ஒருவர் கொரோனா பயம் காரணமாக சாலையில் வீசப்பட்டார். இது தொடர்பாக ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 15ம் தேதி டெல்லியில் இருந்து ஷிகோஹாபாத்திற்கு 19 வயதான அன்ஷிகா யாதவ் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக பேச்சு வந்துள்ளது. இதனால் சக பயணிகள் அந்த பெண்ணை கீழே இறக்கிவிட வேண்டும் என்று பிரச்னை செய்துள்ளனர்.
 

டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு பஸ்ஸில் சென்ற பெண் ஒருவர் கொரோனா பயம் காரணமாக சாலையில் வீசப்பட்டார். இது தொடர்பாக ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 15ம் தேதி டெல்லியில் இருந்து ஷிகோஹாபாத்திற்கு 19 வயதான அன்ஷிகா யாதவ் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக பேச்சு வந்துள்ளது. இதனால் சக பயணிகள் அந்த பெண்ணை கீழே இறக்கிவிட வேண்டும் என்று பிரச்னை செய்துள்ளனர். டிரைவர், நடத்துநர், பயணிகள் அனைவரும் செய்து யமுனா எஸ்பிரஸ் சாலையில் கீழே தள்ளியுள்ளனர். இதில் காயம் அடைந்த அந்த பெண் 30 நிமிடங்களில் உயிரிழந்தார்.
இது குறித்து மதுரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இது இயற்கையான மரணம் என்று கூறி புகாரை பெற அவர்கள் மறுத்துவிட்டனர்.

வழியில் ஒரு இடத்தில் நடந்தது என்பதால் இது பற்றிய பெரிய அளவில் யாருக்கும் தெரியவில்லை.
இளம் பெண் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் போராடி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் இது குறித்து உ.பி போலீசில் புகார் அளித்தார். மேலும், சம்பவம் தொடர்பாக இளம் பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கனவே அளித்த புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவி தலையிட்டபிறகுதான் இந்த விவகாரம் ஊடகங்களுக்குத் தெரியவந்துள்ளது.


சம்பவம் குறித்து பஸ்ஸில் பயணம் செய்த அந்த இளம் பெண்ணின் சகோதரர் கூறுகையில், “எல்லோரும் சேர்ந்து என் சகோதரி மீது ஒரு போர்வையை போர்த்தினர். பின்னர் அவரை பிடித்து இழுத்துவந்து வெளியே தள்ளினர். இதில் காயம் அடைந்தார். அவளை விட்டுவிடும்படி அம்மா எவ்வளவோ கெஞ்சினார். ஆனால் யாரும் கேட்கவில்லை.

என் சகோதரிக்கு எந்த உடல்நலக் கோளாறும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கல் பிரச்னை இருந்தது. அதுவும் சரி செய்யப்பட்டது. அப்படி இருக்கும்போது எப்படி ஒருவர் இளம் வயதில் மாரடைப்பு வந்து இறக்க முடியும்” என்றார்.
வட இந்தியா முன்னேறிவிட்டது, தமிழகம் முன்னேற்றம் இன்றி இருக்கிறது என்று கூறுபவர்கள் இது போன்ற சம்பவங்களைப் படித்த பிறகாவது திருந்தினால் சரி.