காதலிக்க மறுத்ததால் வெறிச்செயல்! மாணவியின் கழுத்தை அறுத்த கொடூரன்
Updated: Jul 26, 2026, 14:34 IST
சிதம்பரம் அருகே கீழ மூங்கிலடி கிராமத்தில் காதலிக்க வற்புறுத்தியும் மறுத்ததால் பள்ளி மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே கீழ மூங்கிலடி கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் 11ஆம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கு எலெக்ட்ரிக்கல் வேலை செய்ய சென்றபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது முதல் தொடர்ச்சியாக தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஐயப்பன். ஆனால் மாணவி காதலிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமைந்த ஐயப்பன், மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய கொலை வெறிப்பிடித்த இளைஞர் ஐயப்பனை போலீசார் தேடிவருகின்றனர்.