×

“பத்தாம் க்ளாஸ் படிச்சா போலீஸ் அதிகாரி ,அஞ்சாம் க்ளாஸ் படிச்சா அரசு அதிகாரி”-ஆப் மூலம் நடந்த மோசடி அம்பலம்

ஒரு “பேஸ் ஆப்” மூலம் அரசு தேர்வுக்கு ஆள் மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பிய மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் அர்பிட், தினேஷ் மற்றும் அமன் என்ற மூவரும் ஒரு மோசடி ஆபீஸ் நடத்தி வருகிறாரக்ள் .அவர்கள் எஸ்.எஸ்.எல் .சி . தேர்வில் தேர்ச்சி பெற்று டெல்லியின் முகர்ஜி நகரில் வசித்து வந்தார்கள் . ஒன்பது பேர் கொண்ட அவர்கள் குழு, பலருக்கு மோசடியாக பல அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுத்துள்ளார்கள்
 


ஒரு “பேஸ் ஆப்” மூலம் அரசு தேர்வுக்கு ஆள் மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பிய மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் அர்பிட், தினேஷ் மற்றும் அமன் என்ற மூவரும் ஒரு மோசடி ஆபீஸ் நடத்தி வருகிறாரக்ள் .அவர்கள் எஸ்.எஸ்.எல் .சி . தேர்வில் தேர்ச்சி பெற்று டெல்லியின் முகர்ஜி நகரில் வசித்து வந்தார்கள் . ஒன்பது பேர் கொண்ட அவர்கள் குழு, பலருக்கு மோசடியாக பல அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுத்துள்ளார்கள் .அவர்கள் காவல்துறை உட்பட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை பெற குறைந்தபட்சம் 100 பேருக்கு உதவி செய்ததாக போலீசார் அந்த கும்பலைக் கைது செய்துள்ளனர்.

அவர்கள் டெல்லி மற்றும் ஹரியானா காவல்துறையில் போலீஸ் வேலை பெற ஆள்மாறாட்டம் செய்து பல பேருக்கு உதவினர். இந்த வழக்கில் இதுவரை ஒன்பது சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் பாதுகாப்பு அமைச்சில் உதவி பிரிவு அதிகாரி (ASO) வேலைக்கு தகுதி பெற்று நியமனக் கடிதத்திற்காக காத்திருந்தார்.
அதன் பின்னர், டெல்லியின் முண்ட்கா பகுதியில் அரசு வேலைகள் உட்பட பல்வேறு தேர்வுகளை நடத்திய பரீட்சை மையத்தின் அதிகாரி உட்பட மேலும் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளார்கள் .
இந்த மோசடி பற்றி போலீசார் கூறுகையில், குற்றவாளிகள் ஒரு ‘பேஸ் ஆப்’பை பயன்படுத்தி சந்தேகத்திற்கு இடமின்றி ஆள்மாறாட்டம் செய்பவர்களை தேர்வு மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றனர். எக்ஸாம் எழுதுபவரின் புகைப்படத்தை கூட அவர்கள் ஆப் மூலம் மாற்றினார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமையன்று கண்டறியப்பட்ட இந்த மோசடி கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அவர்கள் தேர்வின் அளவைப் பொறுத்து ரூ .10 லட்சம் முதல் ரூ .35 லட்சம் வரை வசூலிக்கிறார்.இந்த மோசடியில் ஒரு வருமான வரி ஆய்வாளர், முன்னாள் ஐடி ஆய்வாளர் ஆகியோருக்கும் தொடர்பிருப்பதை போலீசார் கண்டறிந்தனர் .