×

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜெயில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் தர்மேந்திர வால்வி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பெயில் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விசாரித்தார். அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே
 

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜெயில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் தர்மேந்திர வால்வி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பெயில் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விசாரித்தார். அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே குற்றவாளி சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? இன்று பகவான் கிருஷ்ணர் ஜெயிலில் பிறந்த தினம். நீங்கள் சிறையிலிருந்து வெளியே செல்ல விரும்புகிறீர்களா? என நகைச்சுவையாக கேட்டார். அதற்கு வழக்கறிஞர் பெயில் வேண்டும் என உறுதிமொழியில் பதிலளித்தார். பின் பெயில் வழங்குவதற்கு முன், மதம் என்பது நீங்கள் மிகவும் இணைக்கப்பட்ட ஒன்றல்ல என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்தார்.

1994ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தர்மேந்திர வால்வி மற்றும் அந்த கட்சியை சேர்ந்த 5 பேரும், தங்களது எதிர்கட்சியான பா.ஜ.க. தலைவர் ஒருவரை கொலை செய்தனர். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் கீழ் நீதிமன்ற தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தர்மேந்திர வால்வி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.