“கழுத்தை அறுத்து ரத்தம் பிடித்தோம்“- கொலையாளி வாக்குமூலம்!
ஆக்ரா ரயிலில் சூட்கேஸில் பெண் உடல் கண்டுபிடிக்க சம்பவத்தில் கைதான தம்பதி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அப்போது ஒரு பொதுப்பெட்டியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசிய நிலையில், அங்கு சந்தேகத்திற்கிடமாக சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதற்குள் அடையாளம் தெரியாத நிலையில் மனித உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆக்ரா போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். சடலம் தொடர்பான தடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சூட்கேஸ் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பல மணி நேரம் நடைபெற்ற தீவிர ஆய்வில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் சிவப்பு நிற சூட்கேஸுடன் வந்த ஒரு ஆணும், பெண்ணும் அதை ஆக்ரா செல்லும் ரயிலில் வைத்துவிட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் பயணித்தது கண்டறியப்பட்டது. அவர்கள் சென்ற சாலையில் இருந்த 200 க்கும் மேற்பட்ட கேமரா மற்றும் அதில் நூற்றுக்கணக்கான footage ஆய்வு செய்து அந்த ஜோடியின் வீட்டை சென்னை போலீசார் கண்டுபிடித்தனர். வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் பிரியாணி அண்டா இருந்தது. அதில் மனித மாமிசத்தை வைத்து பிரியாணி சமைத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி பிரியாணி சாப்பிட்டு மீதி உடலை சூட்கேசில் வைத்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
சென்னை அருகே கூடுவாஞ்சோியில் பெண்ணை கொடூரமாகக் கொன்று பிாியாணி அண்டாவில் உடலை வேகவைத்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டனர். மணிப்பூாில் தலைமறைவாக இருந்த கொலையாளி மாணிக் உத்தீன், அவரது மனைவி மணிப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டது ஒடிசாவை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், மாணிக்கிற்கும் ஒடிசாவை சேர்ந்த நிஷாவுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இது மாணிக்கின் மனைவிக்கு தெரிந்ததால் தகராரு முற்றியுள்ளது. அதேசமயம் கொலையுண்ட ஒடிசா பெண்ணிடம் தகாத உறவில் இருந்து கர்ப்பமாக்கியதாகவும், அதை கலைக்க சொன்ன போது மறுத்து திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியதால், அவரை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டி, கழுத்தை அறுத்து பிரியாணி அண்டாவில் ரத்தத்தை பிடித்ததாக மாணிக் வாக்குமூலம் அளித்துள்ளார். பாதி உடலை சூட்கேசிலும், மீதியை பிரியாணி செய்ததும் தெரியவந்துள்ளது.