×

ஏடிஎம் நம்பரை சொன்ன அடுத்த நிமிடமே பல ஆயிரங்களை இழந்த விவசாயி!- குறிவைத்து செயல்படும் மோசடி கும்பல்

வங்கி மேனேஜர் பேசுகிறேன் கூறிய விவசாயி ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பலிடம் ஈரோட்டை சேர்ந்த விவசாயி ஏமாந்துள்ளார். வடமாநில கொள்ளையர்கள் தமிழகத்தை குறிவைத்து தங்களை வேலைகளை காட்டி வருகின்றனர். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளது. பலர் இந்த வங்கி கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் விவசாயிகளும் மானியத்துக்கான வங்கிக் கணக்கை தொடங்கியுள்ளனர். இவர்களை குறிவைத்து வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் ஒன்று திருட்டில்
 

வங்கி மேனேஜர் பேசுகிறேன் கூறிய விவசாயி ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பலிடம் ஈரோட்டை சேர்ந்த விவசாயி ஏமாந்துள்ளார்.

வடமாநில கொள்ளையர்கள் தமிழகத்தை குறிவைத்து தங்களை வேலைகளை காட்டி வருகின்றனர். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளது. பலர் இந்த வங்கி கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் விவசாயிகளும் மானியத்துக்கான வங்கிக் கணக்கை தொடங்கியுள்ளனர். இவர்களை குறிவைத்து வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் ஒன்று திருட்டில் ஈடுபட்டு வருகிறது. நான் வங்கி மேனேஜர் பேசுகிறேன் என்று கூறிய தங்கள், ஏடிஎம் நம்பர், பின் நம்பர், ஓடிபி நம்பரையும் கொடுத்துவிடுகிறார்கள். அடுத்த நிமிடமே அவர்களது வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. படித்தவர்களும் இப்படி ஏமாந்து போகிறார்கள். இந்த நிலையில், ஈரோட்டை சேர்ந்த விவசாயி ஒருவர், இந்த கும்பலிடம் ஏமாந்து தனது வங்கிக் கணக்கில் இருந்த ஆயிரக்கணக்கான பணத்தை இழந்துள்ளார்.

அவர், ஈரோடு மாவட்டம், சிவகிரி தாண்டாம்பாளையம் மடத்துநகரை சேர்ந்த விவசாயி முருகேசன் (45). தற்போது இவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் அளித்த புகார் மனுவில், “எனக்கு சிவகிரியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த 13-ம் தேதி எனது செல்போனுக்கு ஒருவர் தொடர்புகொண்டு, வங்கியின் மேலாளர் பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு, வங்கி கணக்கு விவரங்களை பெற்றுக்கொண்டார்.


அதன்பிறகு எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.18 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதேபோல் எனது மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டது. எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.