×

“மூன்று குழந்தைகளுக்கு அப்பா” ஆசிரியையை ஏமாற்றி திருமணம் செய்த பலே கில்லாடி!!

திருமணமானதை மறைத்து ஆசிரியை ஒருவரை வாலிபர் ஒருவர் 2வதாக திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் அனுசுயா (31) என்பவர் வடபழனியில் வசித்து வருகிறார். இவர் நந்தம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இணையதளம் மூலம் திருமணத்திற்கு வரன் வந்து திருமணம் முடிந்த நிலையில் சமீபத்தில் சென்னை வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சென்னையை சேர்ந்த லோகநாத ரவிகுமார் என்பவரை கடந்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம்
 

திருமணமானதை மறைத்து ஆசிரியை ஒருவரை வாலிபர் ஒருவர் 2வதாக திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் அனுசுயா (31) என்பவர் வடபழனியில் வசித்து வருகிறார். இவர் நந்தம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இணையதளம் மூலம் திருமணத்திற்கு வரன் வந்து திருமணம் முடிந்த நிலையில் சமீபத்தில் சென்னை வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சென்னையை சேர்ந்த லோகநாத ரவிகுமார் என்பவரை கடந்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் திருமணம் செய்துகொண்டேன். திருமணம் முடிந்த கையுடன் ஊரடங்கு போடப்பட்டதால் சென்னை விருகம்பாக்கத்தில் இருவரும் வசித்து வந்தோம்.

என் கணவர் இன்டீரியர் டிசைனர் வேலை செய்து வந்த நிலையில் கடந்த ஆண்டு செப் 9 ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றுவிட்டார். பிறகு அவர் வீட்டிற்கு வரவே இல்லை. இதனால் நான் போன் செய்து அவரை திட்டிய போது தான், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. என் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டீர்களே என்று கேட்டபோது, என் கணவர் என்னைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். என் மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினர். எனக்கு வரதட்சணையாக கொடுத்த 10 சவரன் தங்க நகை, சீர்வரிசை, ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பிடுங்கி வைத்து கொண்டனர். எனவே கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து ஆசிரியை அனுசுயா புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் லோகநாத ரவிகுமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது 498 (A), 406, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.