×

ஓசூரில் கார் ஓட்டுநர் வெட்டி படுகொலை

 

ஓசூர் அருகே முன் விரோதம் காரணமாக கார் டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

ஓசூர் அருகே பட்டிக்கானப்பள்ளி  கிராமத்தை சேர்ந்தவர்  லோகேஷ் (36) வாடகை கார் ஓட்டுபவர், இவருக்கு பவானி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.  லோகேஷுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அவரது நண்பர்கள் செல்போனில் லோகேஷை அழைத்துள்ளார்கள் அப்போது கிராமத்தில் உள்ள தண்ணீர் டேங்க் அருகே நின்றுள்ளார். அவரை செல்போனில் அழைத்த மர்ம நபர்கள் கிராமத்தின் அருகே மரத்தடிக்கு வரவழைத்து தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் தலை, முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் லோகேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த பாகலூர் போலீசார் அப்பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் விசாரணை நடத்தப்பட்டது. லோகேஷுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே இருந்து வந்த சொத்து பிரச்சனை ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.