×

அக்காவை கொலை செய்த தம்பி! அதிரவைக்கும் காரணம்

 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே அக்கா தவறான தொடர்பில் இருந்ததாக ஆத்திரத்தில் பெண்ணை வெட்டிக் கொன்ற சகோதரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் இந்திரா காலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகசுதா என்று சுமித்ரா. (35 ) கடந்த 10 தினங்களுக்கு முன்பு புளியங்குளத்தில் இருந்து வீட்டை காலி செய்து செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் விடுதியில் தங்கி பள்ளி படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டிற்கு இருவர் வந்துள்ளனர். அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். 

இந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ் தலைமையிலான செய்துங்கநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சுமித்ராவின் சகோதரர் முத்துராஜா (27) இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தனது அக்கா பலருடன் தொடர்பில் இருந்ததாக ஆத்திரத்தில் அவரை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  புளியங்குளம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த முத்துராஜாவை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்