×

திருத்தணி அருகே சரியாக ஆடு மேய்க்காத சிறுவன் அடித்துக் கொலை

 

திருத்தணி அருகே சரியாக ஆடு மேய்க்காத சிறுவனை அடித்துக் கொன்ற பண்ணை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தில் ஆட்டுப்பண்ணையில் வேலை பார்த்துவந்த 15 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார். முருகன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பண்ணையில் வெண்ணிலா என்பவரும் அவரது 3 மகன்களும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சரியாக ஆடு மேய்க்காத வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷை (15) பண்ணை உரிமையாளர் முருகன் அடித்து கொன்றதாக தெரிகிறது. உயிரிழந்த சிறுவனின் உடலை பண்ணை உரிமையாளர் முருகன் குழித்தோண்டி புதைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கொலையை மறைக்க சிறுவனின் தாயார் வெண்ணிலாவை பண்ணை உரிமையாளர் முருகன் கட்டிவைத்து சித்தரவதை செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

ஆட்டுப்பண்ணையில் இருந்து தப்பி வந்த வெண்ணிலா திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பண்ணை உரிமையாளர் முருகன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.