×

மாம்பழம் பறிக்க சென்ற சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை -அர்ஜுன் தோட்டத்தில் நடந்த அநியாயம்..

மாம்பழம் பறிக்க சென்ற 14 வயது சிறுமி அந்த தோட்டத்திலேயே பலாத்காரம் செய்யப்பட்டு ,கொலை செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் நடந்துள்ளது . பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் படார் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் அர்ஜுன் மிஸ்ராவுக்கு சொந்தமாக ஒரு பழத்தோட்டம் உள்ளது . புதன்கிழமை அந்த பழத்தோட்டத்திற்கு அந்த பகுதியினை சேர்ந்த அசோக் பாஸ்வான் என்பவரின் 14 வயது சிறுமி மாம்பழம் பறிக்க சென்றுள்ளார் .அவர் அர்ஜுன் தோட்டத்தில் மாம்பழம் பறித்ததை பார்த்த முன்னாள் ராணுவ
 

மாம்பழம் பறிக்க சென்ற 14 வயது சிறுமி அந்த தோட்டத்திலேயே பலாத்காரம் செய்யப்பட்டு ,கொலை செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் நடந்துள்ளது .
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் படார் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் அர்ஜுன் மிஸ்ராவுக்கு சொந்தமாக ஒரு பழத்தோட்டம் உள்ளது . புதன்கிழமை அந்த பழத்தோட்டத்திற்கு அந்த பகுதியினை சேர்ந்த அசோக் பாஸ்வான் என்பவரின் 14 வயது சிறுமி மாம்பழம் பறிக்க சென்றுள்ளார் .அவர் அர்ஜுன் தோட்டத்தில் மாம்பழம் பறித்ததை பார்த்த முன்னாள் ராணுவ வீரர் அர்ஜுன் அவரை பிடித்து கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளாராம் .

இரண்டு நாட்களாக வீட்டுக்கு வராத மகளை காணாத தந்தை அசோக் பாஸ்வான் மகளை பல இடங்களில் தேடி பார்த்தபோது, அவர் அர்ஜுன் தோட்டத்திற்கருகே ஒரு முள்புதரில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார் .உடனே இந்த விஷயம் உள்ளூர் மக்களுக்கு தெரிய வரவே மக்கள் கூட்டமாக திரண்டு வந்தனர் .அவர்கள் ஒன்று சேர்ந்து பழத்தோட்ட உரிமையாளர் அர்ஜுனை தேடி சென்றனர் .மக்கள் கூட்டமாக வருவதினையறிந்த அர்ஜுன் தப்பியோடி விட்டார் .ஆனால் அவர் வீட்டில் அவரின் மனைவி இருந்தார் .அதனால் கோபமடைந்த மக்கள் அவரின் மனைவியை தாக்கினர் ,மேலும் பழத்தோட்டத்திலிருந்த மரங்களை வெட்டி சாய்த்தனர் .

தகவல்கேள்விப்பட்டு விரைந்து வந்த போலீசார் மக்கள் கூட்டத்திலிருந்த அர்ஜுன் மனைவியினை கடுமையாக போராடி மீட்டனர் . இதனால் உடனடியாக இறந்த சிறுமியின் தந்தைக்கு ரூபாய் 400000 இழப்பீடு வழங்கப்பட்டது .போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அர்ஜுனை தேடி வருகிறார்கள் .