×

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், தங்கையை கத்தியால் குத்திக் கொன்ற பெண்!

 

பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீகேஹள்ளியில் னது காதலுக்கும் உறவுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக, தனது காதலன் கென்னத்தின் உதவியுடன் பெற்றோர் மற்றும் சகோதரியை இளம்பெண்கொடூரமாக கொலை செய்துள்ளார்.


பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீகேஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த திங்கட்கிழமை இரவு 55 வயது ஆண், அவரது மனைவி மற்றும் அவரது இளைய மகள் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். இறந்தவர்கள் 55 வயதான சோமசுந்தர், 48 வயதான முத்துலட்சுமி மற்றும் 20 வயதான சுப்ரியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சோமசுந்தர் ஒரு மென்பொருள் நிபுணராகவும், சுப்ரியா பட்டப்படிப்பையும் படித்துவந்தார்.

தனியார் நிறுவன ஊழியரும், உயிரிழந்த சோமசுந்தர்- முத்துலட்சுமி தம்பதியரின் மூத்த மகளுமான ஸ்வேதாவும், அவரது காதலரான கென்னத்தும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு  ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இதற்கு சோமசுந்தர்- முத்துலட்சுமி தம்பதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று இரவு சுமார் 7 மணியளவில், சோமசுந்தர்- முத்துலட்சுமி தம்பதியரும், அவர்களது இளைய மகள் சுப்ரியாவும், மூத்த மகள் ஸ்வேதாவை சந்திக்கச் சென்றிருந்தனர். அப்போது கென்னத்துடனான ஸ்வேதாவின் உறவுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. ஸ்வேதாவும் கென்னத்தும் அந்த மூவரையும் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த பின்னரே இந்தக் குற்றச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் அனுப்பப்பட்டுள்ளன.