×

கிட்னி விற்ற ஏழைகள் -கோடிகளில் புரளும் புரோக்கர்கள் -வெளியான திடுக்கிடும் தகவல்

கிட்னி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்த ஒரு நைஜீரிய நபரை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் ஜகலஹட்டி பகுதியில் 30 வயதான நைஜீரிய குடிமகன் ஆடுதிம் ஒபின்னா வசித்து வந்தார் .அவர் இங்கு பலரின் கிட்னியை மலிவு விலையில் வாங்கி வெளிநாட்டில் அதிக விலைக்கு விற்று வந்தார் .இவரின் நெட் ஒர்க்கில் பலர் இருந்தனர் .இந்த கிட்னி விற்கும் கும்பல் பற்றி பெங்களூரு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .அதனால்
 

கிட்னி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்த ஒரு நைஜீரிய நபரை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு  நகரில் ஜகலஹட்டி பகுதியில் 30 வயதான  நைஜீரிய குடிமகன்  ஆடுதிம் ஒபின்னா வசித்து வந்தார் .அவர் இங்கு பலரின் கிட்னியை மலிவு விலையில் வாங்கி வெளிநாட்டில் அதிக விலைக்கு விற்று வந்தார் .இவரின் நெட் ஒர்க்கில் பலர் இருந்தனர் .இந்த கிட்னி விற்கும் கும்பல் பற்றி பெங்களூரு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .அதனால் அவர்கள்  ரகசியமாக அந்த கூட்டத்தினை கண்காணித்து வந்தனர் .அப்போது அவர்களின் நெட்ஒர்க்கில் இந்த நைஜீரிய நபர் முக்கிய நபர் என்று கண்டறிந்தனர் .அதனால் கடந்த ஜூன் 7ம் தேதி  போலீசார் அவரின் வீட்டை சுற்றி வளைத்தனர் .பின்னர் அவரை கைது செய்து விட்டு அவரின் வீட்டை சோதனையிட்டனர் .

அப்போது இவரிடம்  ஏராளமான ஏழைகள் தங்களின் கிட்னியை மலிவு விலையில் இழந்துள்ளதை கண்டுபிடித்தனர் .பின்னர் அவரிடம் நடத்திய தீவிர  விசாரணையில் “ஒபின்னா சிறுநீரகங்களை விற்பதாகவும் , கிட்னி  தேவைப்படுபவர்களோ அல்லது விற்கத் தயாராக இருப்பவர்களோ அவரை அணுகலாம் என்று சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவார் என்றும் கண்டுபிடித்தனர் .பிறகு அவரின் விசா கடந்த மாதமே காலாவதியானதையும் கண்டு பிடித்தனர் .அவரின் லேப்டாப்பை சோதனையிட்டபோது பலரிடம் கிட்னி மோசடி நடத்தியதையும்  கண்டு பிடித்தனர் .அப்போது அவர் பல ஆதாரங்களை அழிக்க முற்ப்பட்டதால் அவரை போலீசார் எச்சரித்து இழுத்து சென்றனர்.