×

“புருஷன கொஞ்சாம போன்லெ யாரை கொஞ்சுறே” -போன் பேசிய மனைவிக்கு நேர்ந்த நிலை

ஒரு மனைவி எந்நேரமும் போனில் பேசிக்கொண்டிருந்ததால் சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்தது கர்நாடகாவின் பெங்களூருவில் தவரகேர் வட்டாரத்தில் வசிக்கும் சுஷ்மிதா என்ற பெண் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அங்கு ஒரு கடை வைத்திருக்கும் ராகுகிரானுடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு நான்கு மற்றும் இரண்டு வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். சந்தோஷமாக போய் கொண்டிருந்த அவர்களின் இல்வாழ்வில் சந்தேகம் குடிபுகுந்தது .அதற்கு காரணம் செல்போன் என்று
 


ஒரு மனைவி எந்நேரமும் போனில் பேசிக்கொண்டிருந்ததால் சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்தது


கர்நாடகாவின் பெங்களூருவில் தவரகேர் வட்டாரத்தில் வசிக்கும் சுஷ்மிதா என்ற பெண் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அங்கு ஒரு கடை வைத்திருக்கும் ராகுகிரானுடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு நான்கு மற்றும் இரண்டு வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். சந்தோஷமாக போய் கொண்டிருந்த அவர்களின் இல்வாழ்வில் சந்தேகம் குடிபுகுந்தது .அதற்கு காரணம் செல்போன் என்று சொன்னால் அது மிகையாகாது .ஏனெனில் இன்று பல குடும்பங்களின் நிம்மதி தொலைய காரணமே இந்த செல்போன்தான் .
அதன் படி இந்த தம்பதிகளின் வாழ்விலும் செல்போன் புகுந்து,அவர்களின் இல்லற வாழ்வை கசந்து போக செய்தது .அந்தத் சுஷ்மிதா எந்நேரமும் செல்போனிலேயே பேசிக்கொண்டிருந்ததால் அவரின் கணவருக்கு அந்த மனைவி மீது சந்தேகம் வந்தது .இதனால் அந்த குடும்பத்தில் சண்டை வந்தது .தன்னுடைய மனைவி சுஷ்மிதா தான் கடைக்கு சென்றதும் யாரோ ஒருவருடன் கள்ள உறவு வைத்துள்ளதாக சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை நடந்தது .அதற்கு காரணம் அவர் என்நேரமும் செல்போனிலேயே பேசிக்கொண்டிருந்ததுதான் .
கடந்த வாரம் ஒரு நாள் இரவு ராகுகிரண் கடையிலிருந்து உடல் நிலை சரியில்லாமல் வீட்டுக்கு வந்த போது அந்த பெண் அவரை கவணிக்காமல் போன் பேசி கொண்டிருந்தார் .இதனால் கோபமுற்ற அவர் அங்கிருந்த ஒரு கத்தியை எடுத்த மனைவியை குத்தி கொன்றார் .பிறகு தன்னுடைய சகோதரருக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறினார் .பின்னர் சுஷ்மிதாவின் தாயார் போலீசுக்கு தகவல் கூறியதும் ,போலீசார் அங்கு வந்து மனைவியை கொன்ற ராகுகிரனை கைது செய்தார்கள் .