×

“புத்தாண்டு பரிசாக வாட்ஸ் அப்பில் வெளியான வீடியோ” -காதலன் செயலால் காதலி அதிர்ச்சி

ஒரு மைனர் பெண்ணை காதலித்த வாலிபர், அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன் நண்பர்களோடு பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை ஊடகத்தில் வெளியிட்டதால் போலீஸ் அவர்களை தேடி வருகிறது . உத்தரபிரதேசத்தின் பரேலியில் வசிக்கும் 16 வயதான ஒரு மைனர் பெண் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்தார் .அந்த வாலிபரும் அந்த பெண்ணை காதலிப்பது போல நடித்தார் .ஆனால் அந்த பெண் அவரை உண்மையாக காதலித்ததால் அவர் சொன்னபடியெல்லாம் கேட்டார் .அதனால் கடந்த
 

ஒரு மைனர் பெண்ணை காதலித்த வாலிபர், அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன் நண்பர்களோடு பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை ஊடகத்தில் வெளியிட்டதால் போலீஸ் அவர்களை தேடி வருகிறது .

உத்தரபிரதேசத்தின் பரேலியில் வசிக்கும் 16 வயதான ஒரு மைனர் பெண் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்தார் .அந்த வாலிபரும் அந்த பெண்ணை காதலிப்பது போல நடித்தார் .ஆனால் அந்த பெண் அவரை உண்மையாக காதலித்ததால் அவர் சொன்னபடியெல்லாம் கேட்டார் .அதனால் கடந்த ஒரு வருடமாக அவரோடு பாலியல் உறவில் ஈடுபட்டார் .அப்போதெல்லாம் அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் தான் விரைவில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார் .அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவரோடு உறவு கொள்ள பலமுறை சம்மதித்தார் .
இதன் அடுத்த கட்டமாக அந்த காதலன், அந்த பெண்ணின் வெகுளித்தனத்தை இன்னும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டார் .அதனால் தனது காதலியை தன்னுடைய நான்கு நண்பர்களோடு உல்லாசமாக இருந்தால்தான் அவரை திருமணம் செய்து கொள்வதாக மிரட்டினார் .அதற்கு அந்த பெண்ணும் சம்மதித்தார் .பின்னர் அந்த நண்பர்களோடு தன் காதலியை உல்லாசமாக இருக்கவிட்டு அதை வீடியோவும் எடுத்தார் .பிறகு அந்த வீடியோவை ஊடகத்தில் கடந்த புத்தாண்டு அன்று சமூக ஊடகத்தில் வெளியிட்டார். .அந்த பலான வீடியோவை புத்தாண்டு பரிசு என்று கூறி தனது நண்பர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட்டார் .அந்த வீடியோவை பார்த்த அந்த காதலியும் அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தார்கள் .அதனால் அவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்த காதலன் மீது புகார் கூறினார்கள் .அவர்களின் புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த காதலன் மற்றும் அவரின் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள் .