×

சாப்ட்வேர் என்ஜினீயரிடம் 16 லட்சம் அபேஸ் செய்த பெண்…. தொடரும் மேட்ரிமோனி மோசடிகள்!

31 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் மேட்ரிமோனி தளத்தில் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவருக்கு காத்திருந்தது மிக பெரிய அதிர்ச்சி. மேட்ரிமோனி தளத்தில் பார்த்த பெண்ணுடன் பழகி வந்த சாப்ட்வேர் என்ஜினீயர் 16 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூரின் துருபரஹள்ளி பகுதியில் வாழ்ந்து வரும் சாப்ட்வேர் என்ஜினீயர் அன்குர் சர்மா. இவர் கியரா ஷர்மா என்ற பெண்ணை மேட்ரிமோனி தளத்தில் சந்தித்து பின் பழகி வந்துள்ளார். சில நாள் பழக்கத்திற்குப்
 

31 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் மேட்ரிமோனி தளத்தில் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவருக்கு காத்திருந்தது மிக பெரிய அதிர்ச்சி. மேட்ரிமோனி தளத்தில் பார்த்த பெண்ணுடன் பழகி வந்த சாப்ட்வேர் என்ஜினீயர் 16 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

பெங்களூரின் துருபரஹள்ளி பகுதியில் வாழ்ந்து வரும் சாப்ட்வேர் என்ஜினீயர் அன்குர் சர்மா. இவர் கியரா ஷர்மா என்ற பெண்ணை மேட்ரிமோனி தளத்தில் சந்தித்து பின் பழகி வந்துள்ளார். சில நாள் பழக்கத்திற்குப் பின் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், கியாரா தான் பண நெருக்கடியில் இருப்பதாகக் கூறி அவ்வப்போது அன்குரிடம் பணம் பெற்று வந்துள்ளார். திருமணம் செய்யப்போகும் பெண் தானே என்று நம்பி அவரும் பணம் கொடுத்து வந்துள்ளார்.

இப்படியாக அந்தப் பெண்ணிற்கு 16,82,222 ரூபாய் வரை கொடுத்துள்ளார். பின் நாளடைவில் பணத்தைத் திருப்பி தருமாறு அன்குர் கேட்க அவரைத் தவிர்த்து வந்துள்ளார் அந்தப் பெண். பின் அன்குரின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்க மறுத்துள்ளார். திருமணம் செய்துக்கொள்ளவும் மறுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த என்ஜினீயர் காவல்நிலைத்தில் புகார் அளித்துள்ளார்.

அனைத்து பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் நடந்துள்ளதால் அவற்றின் விவரங்கள் குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.