×

“அதிமுக, பாமக சாதிவெறியர்கள் கூட்டு…” அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் !!!

அரக்கோணத்தை அடுத்த சோமனூர் காலனியில் கடந்த 6ம் தேதி தேர்தல் முன்விரோதம் காரணமாக இருவர் கொலை செய்யப்பட்டனர். அர்ஜுனன், சூர்யா என்கின்ற இரண்டு இளைஞர்கள் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவரின் மகன் சத்யா தலைமையிலான 10 பேர் கொண்ட மர்ம கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதில் உயிரிழந்த சூர்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகும் நிலையில் , அர்ஜுனனுக்கு திருமணமாகி 8 மாத கைக்குழந்தையுடன், அவரது மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ளது
 

அரக்கோணத்தை அடுத்த சோமனூர் காலனியில் கடந்த 6ம் தேதி தேர்தல் முன்விரோதம் காரணமாக இருவர் கொலை செய்யப்பட்டனர். அர்ஜுனன், சூர்யா என்கின்ற இரண்டு இளைஞர்கள் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவரின் மகன் சத்யா தலைமையிலான 10 பேர் கொண்ட மர்ம கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதில் உயிரிழந்த சூர்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகும் நிலையில் , அர்ஜுனனுக்கு திருமணமாகி 8 மாத கைக்குழந்தையுடன், அவரது மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ளது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த தாக்குதலின்போது இருவர் படுகாயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலஅறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுவரை 6  பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் .

உயிரிழந்தவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கொலையாளிகள் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன், இயக்குநர் பா.ரஞ்ஜித் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் அரக்கோணம் இரட்டைக்கொலை சம்பவத்தில் கொலையாளிகளான சாதிவெறியர்ககளைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஆர்ப்பாட்டம் செய்கிறது. அத்துடன் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விசிக வேட்பாளர் கௌதமசன்னாவுக்கு ஆதாரத்துக்கு அக்கிராம இளைஞர்கள் வாக்கு சேகரித்துள்ளனர் . அத்துடன் பாமக ஆதரிக்கும் அதிமுக வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தேர்தல் சூழலை பயன்படுத்தி, பழனியின் மகன்களும் அதிமுக, பாமக சாதிவெறியர்கள் கூட்டு சேர்ந்து இந்த படுகொலையை நடத்தி உள்ளனர் என்று திருமாவளவன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.