×

அமேசான், பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களே உஷார்… டெலிவரி என்ற பெயரில் கஸ்டமருக்கு நாமம் போடும் மோசடிகள்!

நாம் டிஜிட்டல் யுகத்திற்கு மாறி வருகிறோம். சொல்லப்போனால் மாறவேண்டிய கட்டாயதிற்கு ஆளாகிவிட்டோம். தற்போது பெரும்பாலான மக்கள் ஆன்லைன் தளங்கள் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவைத்துக் கொள்கின்றனர். அவற்றில் இருக்கும் நம்பிக்கைத்தன்மை, உடனே ரிப்ளேஸ் செய்யும் வசதி போல பல அம்சங்கள் இருந்ததால் மக்களிடம் எளிதாக வரவற்பைப் பெற்றன. ஆனால் தற்போது டெலிவெரியில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்கின்றன. ஆர்டர் செய்துவிட்டு ஆசை ஆசையாய் பேக்கை திறந்து பார்த்தால் உள்ளே காலி டப்பாவை வைத்து
 

நாம் டிஜிட்டல் யுகத்திற்கு மாறி வருகிறோம். சொல்லப்போனால் மாறவேண்டிய கட்டாயதிற்கு ஆளாகிவிட்டோம். தற்போது பெரும்பாலான மக்கள் ஆன்லைன் தளங்கள் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவைத்துக் கொள்கின்றனர். அவற்றில் இருக்கும் நம்பிக்கைத்தன்மை, உடனே ரிப்ளேஸ் செய்யும் வசதி போல பல அம்சங்கள் இருந்ததால் மக்களிடம் எளிதாக வரவற்பைப் பெற்றன. ஆனால் தற்போது டெலிவெரியில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்கின்றன. ஆர்டர் செய்துவிட்டு ஆசை ஆசையாய் பேக்கை திறந்து பார்த்தால் உள்ளே காலி டப்பாவை வைத்து கஸ்டமருக்கு நாமம் போடுகின்றனர். 40 கோடி பேர் ஆன்லைன் தளங்களை உபயோகிக்கும் நாட்டில் இந்த மாதிரித் தவறுகள் மிகவும் கவனிக்கவேண்டியவை.

சமீபத்தில், ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு காலி டப்பா டெலிவரி செய்யப்பட்டது ஆன்லைன் வடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கர்நாடகாவின் சிக்மகளூரு பகுதியில் ந மொபைல் போன் ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் மொபைல் போன் பார்சல் டப்பாவில் மொபைல் போனிற்கு பதிலாக ஒரு உருளைக்கிழங்கு, சில கற்கள் மற்றும் ஒரு விம் பார் சோப்பு வைக்கப்பட்டு டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. சிக்மகளூரு பகுதியில் வசிக்கும் ஹைதர் அலி என்பவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமேசான் தளத்தின் வழியாக ஸியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்திருந்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஹைதர் அமேசான் நிறுவனம் தனது பயனர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் போது, வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும் விசயங்களைக் கேள்விப்பட்டேன். எனவே நான் ஆர்டர் செய்த பொருள் என்னிடம் டெலிவரி செய்யப்பட்டதும், பார்சலை டெலிவரி செய்தவர் முன்னிலையிலேயே திறந்து பார்த்தேன், அதில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு பதிலாக பாக்ஸில் உருளைக்கிழங்கு கற்கள் மற்றும் சோப்பு ஒன்றும் எடைக்கு ஏற்ப வைத்து அனுப்பியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இது அமேசானின் தவறா? டெலிவரி செய்யும் நிறுவனத்தின் தவறா? என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. டெலிவரி செய்த்தவரும் இது எப்படி நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என்றிருக்கிறார். ஹைதர் அலி மோசடியை உறுதிப்படுத்திவிட்டு பணம் செலுத்தாமல் டெலிவரி செய்தவரை அனுப்பிவிட்டு, சிருங்கேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இனி நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்பவர் கண்முன்னே திறந்து சரியாக இருக்கிறதா என சரிபார்க்க என மறந்துவிடாதீர்கள்.