×

சொப்னாவையே தூக்கி சாப்பிட்ட தங்க கடத்தல்காரர்கள் -கேரளாவில் நூதன முறையில் தங்கம் கடத்தல் தொடர்கிறது…

கேரளாவில் சொப்னா, தங்க கடத்தலை பல புது புது வழியில் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு கடத்தியது அனைவரும் அறிந்தது .ஆனால் அவரையே மிஞ்சுமளவுக்கு இன்னும் புது ரூட்டில் சிலர் தங்கம் கடத்தி வந்துள்ளனர் . ஷார்ஜாவிலிருந்து இரண்டு பயணிகள் ஏர் அரேபியா விமானம் ஜி 9454 இல் கோழிக்கோடு விமான நிலையம் வந்தனர் .அப்போது புலனாய்வு பிரிவு அவர்களிடம் நடத்திய சோதனையில், அவர்கள் 334 கிராம் தங்கமாகவும் மற்றும் 230 கிராம் தங்க ஆபரணங்களாகவும் கடத்தி வந்ததால்
 

கேரளாவில் சொப்னா, தங்க கடத்தலை பல புது புது வழியில் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு கடத்தியது அனைவரும் அறிந்தது .ஆனால் அவரையே மிஞ்சுமளவுக்கு இன்னும் புது ரூட்டில் சிலர் தங்கம் கடத்தி வந்துள்ளனர் .

ஷார்ஜாவிலிருந்து இரண்டு பயணிகள் ஏர் அரேபியா விமானம் ஜி 9454 இல் கோழிக்கோடு விமான நிலையம் வந்தனர் .அப்போது புலனாய்வு பிரிவு அவர்களிடம் நடத்திய சோதனையில், அவர்கள் 334 கிராம் தங்கமாகவும் மற்றும் 230 கிராம் தங்க ஆபரணங்களாகவும் கடத்தி வந்ததால் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் .அவர்கள் கடத்தி வந்த விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது

அந்த பயணிகள் 230கிராம் தங்கத்தை ஆபரணங்களாக அணிந்திருந்தபோது ,தங்க துகள் அவர்களின் சாக்ஸுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை முதலில் சாக்ஸ் என்று அதிகாரிகள் நினைத்தார்கள் .பிறகு சந்தேகம் வந்து அதை சோதித்த போது அது தங்க துகளால் செய்யப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்கள் .இது குறித்து மேலதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அன்றே துபாயிலிருந்து வந்த மேலும் இரண்டு பயணிகளிடமிருந்து முறையே 464 மற்றும் 468 கிராம் தங்கம், 45 அட்டைப்பெட்டிகளில் சிகரெட்டு வடிவத்தில் இருந்தது கண்டு அதிகாரிகள் ஆச்சரியப்பட்டனர் .மேலும் அவர்களிடமிருந்து நான்கு ஐபோன்களையும் மாநில சுங்க ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.