கொடைக்கானலில் நடிகை விஷ்ணுப் பிரியாவின் தந்தை கொடூரக் கொலை
கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதியில் உரிமையாளரை கொலை செய்து தப்பி சென்ற மர்மநபர்களை மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஹைதராபாத் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சூரிய நாராயணன் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே சொந்தமான தங்கும் விடுதி வைத்துள்ளார். இந்த நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் சூரிய நாராயணனுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் கடந்த இரண்டு தினங்களாக தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலைகள் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் சூரிய நாராயணன் அவரது தங்கும் விடுதியில் பணியாற்றிய வந்த சக பணியாளர்கள் தங்களது வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், தங்கும் விடுதியில் சூரிய நாராயணன் மற்றும் இரண்டு கேர் டக்கர்கள் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை நோட்டமிட்ட ஐந்து நபர்கள் கேர் டக்கர் இரண்டு நபர்களையும் கயிற்றால் தூண் மற்றும் ஜன்னல்களில் கட்டி வைத்துவிட்டு சூரிய நாராயணன் கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் கேர் டேக்கர் ஒருவர் தன்னை கட்டி வைத்த கயிறை அவிழ்த்து அப்பகுதியில் இருந்து தப்பித்து வெளியே சென்று கூச்சலிட்டு அப்பகுதியில் இருந்தவர்களின் செல்போனில் இருந்து கொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வருவதற்குள் குற்றவாளிகள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தனியார் விடுதியை ஆய்வு செய்த பொழுது அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் சிசிடிவி கொலை செய்யப்பட்டவரின் செல்போன் என எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொலையாளிகள் யார் என தெரியாமல் உள்ள நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதிப் தலைமையில் 50 மேற்பட்ட சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் அடுத்த கட்டமாக மோப்ப நாயகிகளின் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சூரிய நாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.தனியார் தங்கும் விடுதியில் அதனின் உரிமையாளர் கொல்லப்பட்டது கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.