×

மாஜி அதிமுக அமைச்சர் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு

மாஜி அதிமுக அமைச்சர் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை சைதாப்பேடை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி. மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். இவர், தன்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்திருந்தார். ஐந்து வருடங்கள் அவரும் நானும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தோம். இதனால் மூன்று முறை அவர் மூலம் கர்ப்பம்
 

மாஜி அதிமுக அமைச்சர் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை சைதாப்பேடை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் நடிகை சாந்தினி.

நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி. மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். இவர், தன்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்திருந்தார். ஐந்து வருடங்கள் அவரும் நானும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தோம். இதனால் மூன்று முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரின் மிரட்டலில் மூன்று முறையும் கருவை கலைத்து விட்டேன். இப்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர். மணிகண்டன் மீது ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சாந்தினி வழக்கு தொடர்ந்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு கோரலாம் என்ற அடிப்படையில் சாந்தினி இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார்.

சென்னையில் இருந்து கொண்டு தான் இந்த வழக்கை நடத்த வேண்டும் என்பதால் வழக்கு முடியும் வரைக்கும் தனக்கு மாதாந்திர இடைக்கால தொகையை வழங்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருக்கிறார். சாந்தி தொடர்ந்த இந்த வழக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.