காதலனுடன் சேர்ந்து கொடூர கொலையை கச்சிதமாக செய்து முடித்த இளம்பெண்- பரபரப்பு பின்னணி
புனேவில் வருங்கால கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் பிரபல தொழிலதிபர் ஒருவரின் இளம் மகனான கேதன் விஷால்(26) என்பவரும்மும் சியா கோயல் (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்தசூழலில் புனே அருகே உள்ள லோகட் கோட்டைக்கு இருவரும் அவுட்டிங் சென்றிருந்தனர். அப்போது தனது காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவர் கேதனை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார் சியா கோயல். பின்பு செல்பி எடுக்கும்போது பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். இதனால் காவல்துறை விபத்து மரணம் என அறிக்கை செய்தது. இருப்பினும், அந்தப் பெண் தனது நடத்தையில் எந்த சோகத்தையும் காட்டாததால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். அதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன்படி, சியா கடந்த ஆண்டு ஒரு வணிகக் கூட்டத்தில் சந்தித்த 22 வயதான சேதன் பாபுலால் சௌத்ரியுடன் உறவில் இருந்ததும் தெரியவந்தது. சியா ஒரு பேக்கரியை நடத்தி வந்த நிலையில், சேதன் அந்த கடைக்கு உலர் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் பெற்றொர் நிச்சயித்த இத்திருமணத்தில் சியாவுக்கு விருப்பம் இல்லாததால், தனது காதலன் சேதன் பாபுலால் உடன் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.