×

கொடுத்த கடனை திருப்பி கேட்ட பைனான்சியரை கொன்று புதைத்த வாலிபர்

 

ஆந்திராவில் கொடுத்த கடனை திருப்பி கேட்டதற்காக கொலை செய்து புதிதாக கட்டி வரும் வீட்டில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநலம் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீநாத் பெங்களூரில் பைனான்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபாகருக்கு அவசர தேவை என்று கேட்டதால் ரூ.40 லட்சம்  கடனாக கொடுத்தார். ஒரு வாரத்திற்குள் தருவதாகக் கூறிய பிராபாகர், அதன் பிறகு பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து போன் செய்தாலும் எடுக்காமல் இருந்தார். இதனால் நேரில் வந்து கேட்கும் போதெல்லாம் பிரபாகர் பல்வேறு பொய்களைச் சொல்லத் தொடங்கினார்.  

பெங்களூரில் இருந்து வரும் ஒவ்வொரு முறையும் தன்னை பணம் கேட்டு தொல்லை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அவமானம் படுத்துவதாக எண்ணிய பிரபாகர், கடந்த  அக்டோபர் 27 அன்று, ஸ்ரீநாத் பெங்களூருவிலிருந்து குப்பத்திற்க்கு வந்தபோது ஸ்ரீநாத்துக்கும் பிரபாகருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கடன் கொடுத்து அதைத் திருப்பிக் கேட்டதற்காக பிரபாகர் அவரைக் கொடூரமாகக் தாக்கி கொன்றார். ஸ்ரீநாத் ஒரு வாரமாக வீட்டிற்கு வராததால், பெங்களூரு உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். ஸ்ரீநாத் காணாமல் போனதாக போலீசார், மீது வழக்குப் பதிவு செய்து கர்நாடக- ஆந்திரா போலீசார்  விசாரணையில் நடத்தி வந்தனர். இதில்  ஸ்ரீநாத்திற்கும் பிரபாகருக்கும் இடையே கடன் விவகாரம் குறித்து அறிந்த போலீசார் இறுதியாக ஸ்ரீநாத் மொபைல் போன் குப்பத்தில் சுவிச் ஆஃப் என்று வந்ததால் பிரபாகரை பிடித்து போலீசார் விசாரித்தனர். தனக்கு தெரியாது தன்னை சந்திக்க ஸ்ரீநாத் வரவில்லை என்று கூறி வந்தார். பின்னர் போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்த போது  குப்பம் நகராட்சியில் உள்ள அமராவதி காலனியில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் அரசு சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டில் புதைத்தாக தெரிவித்தார். 

இதனையடுத்து அங்கு சென்ற  போலீசார் அந்த இடத்தில் சென்று பார்த்தபோது புதைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு ஸ்ரீநாத் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து  தோண்டி பார்த்தபோது  ஸ்ரீநாத் உடல் எடுக்கப்பட்டது. பிரபாகர் மீது கடந்த காலத்தில் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.  இதனையடுத்து ஸ்ரீநாத் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி அந்த பகுதியில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை  அறிக்கை வந்த பிறகு எவ்வாறு கொலை செய்யப்பட்டது eன்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.