×

திருமணத்தை மீண்டும் மீண்டும் ஒத்திவைத்த ஊரடங்கு ! வேதனையில் தற்கொலை செய்து கொண்ட மணமகன் !!

தொடர்ந்து ஊரடங்கு காரணமாக திருமண தேதி ஒத்திவைக்கப்பட்டதால் 30 வயது இளைஞர் ஒருவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சோக சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. ஜாம்ஷெட்பூர் அருகே விஸ்வகர்மா நகரில் உள்ள வீட்டில் 30 வயது நபர் சஞ்சித் குப்தா தற்கொலை செய்து கொண்டார். அவரது திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் அந்த நபர் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானதாக போலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஒலிடி பொலிஸ் நிலையத்தின் எல்லைக்குள் நடந்தது. காவல்துறையினர் தற்கொலை வழக்கு
 

தொடர்ந்து ஊரடங்கு காரணமாக திருமண தேதி ஒத்திவைக்கப்பட்டதால் 30 வயது இளைஞர் ஒருவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சோக சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.

ஜாம்ஷெட்பூர் அருகே விஸ்வகர்மா நகரில் உள்ள வீட்டில் 30 வயது நபர் சஞ்சித் குப்தா தற்கொலை செய்து கொண்டார். அவரது திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் அந்த நபர் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் ஒலிடி பொலிஸ் நிலையத்தின் எல்லைக்குள் நடந்தது. காவல்துறையினர் தற்கொலை வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக எம்ஜிஎம்-க்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

இறந்தவர் சனிக்கிழமை இரவு இரவு உணவு சாப்பிட்டு தனது அறைக்குச் சென்றார். அதிகாலை 4 மணியளவில் அவரது தந்தை ராஜேந்திர பிரசாத் எழுந்து பார்த்தபோது சஞ்சித் மின்விசிறியில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகனை இழந்த தந்தை நொந்து போய்விட்டார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தனது மகனின் திருமணம் பீகாரின் அவுரங்காபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஏப்ரல் 25ஆம் தேதி திருமணம் செய்ய திட்டமிடப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆயினும், கொரோண அச்சம் காரணமாக நாடு தழுவிய ஊரடங்க விதிக்கப்பட்டதால் திருமண தேதி ஒத்திவைக்கப்பட்டது. திருமண தேதி ஒத்திவைப்பு சஞ்சித்தை மோசமாக பாதித்தது என அவரது தந்தை ராஜேந்திரா கூறினார்.

திருமண தேதி ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மளிகை கடை நடத்தி வந்த சஞ்சித் மனச்சோர்வடைந்து தனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பேசுவதை நிறுத்தினார். திருமணம் நின்று போனதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக சஞ்சித் தெரிவித்தபோது அவரை பலர் சமாதானம் செய்தனர். ஆனால் அவர் கேட்க மறுத்துவிட்டார். சஞ்சித் இறப்பதற்கு முன்பு ராஜேந்திரா மேலும் இரண்டு மகன்களை இழந்துவிட்டார். அவரது மகன்களில் ஒருவர் 2000 ஆம் ஆண்டில் நீரில் மூழ்கி இறந்து போனார். மற்றொருவர் 2012 இல் காணாமல் போய்விட்டார்.