×

“மாமியாரை துரத்தலாம் ,தனிக்குடித்தனம் நடத்தலாம்” -அண்ணியை கொன்ற கொழுந்தனார்.

தன்னுடைய கணவன் இறந்த பின்னர் கொழுந்தனாரோடு குடும்பம் நடத்தி வந்த பெண்ணை அந்த கொழுந்தனாரே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. வடகிழக்கு டெல்லியின் கரவால் நகர் பகுதியில் ரோஹித் என்ற 26 வயது நபரின் சகோதரர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார் .அதன் பிறகு அவரின் மனைவி இறந்த கணவரின் தம்பி ரோஹித்துடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திவந்தார் .இந்நிலையில் அவர்களிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது
 

தன்னுடைய கணவன் இறந்த பின்னர் கொழுந்தனாரோடு குடும்பம் நடத்தி வந்த பெண்ணை அந்த கொழுந்தனாரே  கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

வடகிழக்கு டெல்லியின் கரவால் நகர் பகுதியில் ரோஹித் என்ற 26 வயது நபரின் சகோதரர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார் .அதன் பிறகு அவரின் மனைவி இறந்த கணவரின் தம்பி ரோஹித்துடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திவந்தார் .இந்நிலையில் அவர்களிடையே  அடிக்கடி குடும்ப பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது .அதற்கு அவரின் வீட்டில் வசிக்கும் அவரின் மாமியார்தான் காரணம் என்று அவரின் அண்ணி கூறினார்.அதனால் அவரின் கொழுந்தனாரை  அவர் தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தி வந்துள்ளார் .

ஆனால் அதற்கு ரோகித் மறுத்துள்ளார் .தன்னோடு தன்னுடைய அம்மாவும் வரவேண்டுமென்று கூறியுள்ளார் .இதனால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சினைகள் வந்துள்ளது .மேலும் அந்த பெண் தன்னுடைய கொழுந்தனோடு முறைப்படி கல்யாணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார் .அதற்கும் அவர் மறுத்துள்ளார் .அதனால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு வந்துள்ளது .அந்த தகராறில் அவர் தன்னுடைய அண்ணியை கொலை செய்து விட்டார் .பின்னர் அவர் நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்தார் .போலீசார் விரைந்து வந்து அவரின் அண்ணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .பின்னர் ரோகித்தை கைது செய்து சிறையிலடைத்தார்கள் .