மனைவியை உலக்கையால் அடித்து கொன்ற கணவன்
குவாலியரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
முரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, டிஃபென்ஸ் பள்ளிக்கு அருகிலுள்ள தியாகி நகரில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மனைவி மது ஸ்ரீவஸ்தவா. இருவரும் 2010-ல் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஆனந்த் வேலை எதுவும் செல்லாமல்,வீட்டில் அடிக்கடி சண்டையிடுவார் என அக்கம்பாக்கத்தினார் கூறுகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது கணவரின் நீண்ட ஆயுளுக்காக கர்வா சௌத் விரதம் இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் வீட்டிற்குள் நுழைந்தவுடன் மதுவிடம் சண்டையிட்ட ஆனந்த், அவரின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும், பின்னர் மசாலாப் பொருட்களை அரைக்கப் பயன்படுத்தப்படும் உலக்கையால் அவரது தலையில் பலமுறை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் காவல்துறையை தொடர்புகொண்ட ஆனந்த், சம்பவம் குறித்து கூறியுள்ளார். அவர்கள் வருவதற்குள், மது இறந்துவிட்டார்.
அந்த நேரத்தில், மதுவின் நாத்தனார் மற்றொரு அறையில் இருந்ததாகவும், அவருடன் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எந்த அலறல் சத்தத்தையும் கேட்கவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கொலைக்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.