8 வருட காதல்... இந்த ஒரு காரணத்தால் காதலியை கொடூரமாக அடித்து கொல்ல முயன்ற காதலன்
எட்டு வருடம் காதலித்த பெண் பெற்றோர் சொல் கேட்டு பேச மறுத்ததால் சுத்தியலால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் நூதன்கல் மண்டலத்தின் லிங்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்த பாண்ட்லா மகேஷ் மற்றும் அலுகுனூரைச் சேர்ந்த ஸ்பந்தனா ஆகியோர் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அவர்களின் காதல் விவகாரம் ஸ்பந்தனா வீட்டில் தெரிந்ததால் அவர்கள் குடும்பத்தினர் இந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தப்பட்டது. ஒருவருக்கொருவர் அவரவர் வழிகளைக் பார்த்து கொள்ள வேண்டும், ஒருவரையொருவர் சந்திக்காமல் இருக்கவும், இருவரும் ஒப்புக்கொண்டனர். பெரியவர்களின் வார்த்தைகளை மதித்து, ஸ்பந்தனா மகேஷிடம் பேசுவதை நிறுத்தினார்.
ஸ்பந்தனா தன்னிடம் பேசாமல் ஒதுக்கி வைத்திருப்பதை மகேஷால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் சைக்கோ போன்று செயல்பட்டு நீ, எனக்கு இல்லாவிட்டால் இனி இந்த உலகில் இருக்க கூடாது என முடிவு செய்தார். ஸ்பந்தனாவும் அவரது அக்கா வீட்டில் தனியாக இருப்பதைக் அறிந்த மகேஷ் வீட்டில் உள்ளே சென்று ஸ்பந்தனாவிடம் பேச முயன்றார். பெற்றோர் பேச்சை மீறி செயல்பட மாட்டேன் என்று அவர், கூறியதால் தன்னுடன் கொண்டு வந்த சுத்தியலால் தலை மற்றும் உடல் பல இடங்களில் ஸ்பந்தனா மீது தாக்கினார். அடி தாங்க முடியாமல் ஸ்பந்தனா அலறி கொண்டே ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். ஸ்பந்தனாவின் அலறல் சத்தம் கேட்டு, அப்போது மக்கள் உடனடியாக விரைந்து சென்றனர். இதனால் அங்கிருந்து வெளியே தப்பி ஓடிக்கொண்டிருந்த மகேஷை அவர்கள் துரத்திச் சென்று பிடித்தனர். பின்னர் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மகேஷை கைது செய்தனர். பலத்த காயமடைந்த ஸ்பந்தனாவை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாலும் அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.