×

 மனைவியை 14 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்து சித்திரவதை செய்த வழக்கறிஞர்

 

 மனைவியை 14 ஆண்டுகள் பூட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளார் கணவர்.   நீதிமன்ற,ம் காவல்துறை உதவி உடன் அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார்.  

 ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ சத்திய சாய் மாவட்டத்தில் புட்டபர்த்தி பகுதியில் வசித்து வந்தவர் சாய் சுப்ரியா.   இவருக்கு விஜயநகரச் சேர்ந்த வழக்கறிஞர் மதுசூதனன் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.   வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.   இந்த தம்பதிக்கு கடந்து 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்த இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.  

 திருமணத்திற்கு பிறகு  மனைவியை வீட்டின் ஒரு அறையில் பூட்டி வைத்து சித்தரவதை செய்து கொண்டிருக்கிறார் யாரிடமும் பேசக்கூடாது என்றும் கடும் கட்டுப்பாடுகளுடன் பாதுகாத்து வந்திருக்கிறார்.   சாய் சுப்ரியாவை அவரது பெற்றோரும், குழந்தைகளும் பார்க்க வந்த போதும் கூட யாரையும் பார்க்க கூடாது என்று வீட்டில் ஒரு அறை ஒதுக்கி அந்த அறையிலேயே பூட்டி வைத்து சித்திரவதை செய்து வந்திருக்கிறார் . பெற்றோர்கள் தனது மகள் சாய் சித்ராவிடம் பலமுறை பேச வந்த போதும் மதுசூதனன் பேச அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி இருக்கிறார்.  14 வருடங்கள் இப்படி பொறுமையாக காத்திருந்திருக்கிறார்கள்.  

 தற்போது பொறுமை இழந்து  கடந்த 28ஆம் தேதி அன்று தங்கள் மகளை 14 ஆண்டுகளாக மருமகன் அடைத்து வைத்த சித்திரவதை செய்து வருகிறார்கள் என்று போலீசில் புகார் அளிக்க போலீசின் மூலமாக நீதிமன்றத்தில் இது குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றம் அந்த பெண்ணை மீட்க உத்தரவிட்டிருக்கிறது.   அதன் பின்னர் போலீசார் உறவினர்கள் அனைவரும் வீட்டிற்குள் செல்ல வீட்டிற்குள் யாரும் வரக்கூடாது என்று சத்தம் போட்டு இருக்கிறார். 

 நீதிமன்றத்தில் உத்தரவை காட்டவும் உள்ளே அனுமதித்திருக்கிறார்.   போலீசார் வீடு முழுவதும் சுற்றிப் பார்த்து ஒரு அறையில் அடைக்க வைக்கப்பட்டிருந்த சாய் சுப்பிரியாவை மீட்டு உள்ளனர்.   அறைக்குள்ளே அடைப்பதனால் வருடங்கள் நடைபெற்று இருந்ததால் மிகவும் மெலிந்து போய் இருந்திருக்கிறார் .  பின்னர் இந்த சாய் சுப்ரியாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியிருக்கிறார்கள்.   உடல்நிலை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.  வழக்கறிஞர் மதுசூதனன் கைது செய்யப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.