×

மனைவியுடன் கள்ளத்தொடர்பு... மிக்சர் கடை உரிமையாளரை அடித்து கொன்ற பெட்டிக் கடைக்காரர்

 

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை கண்டித்தும் தொடர்ந்ததால் பெட்டி கடைக்காரர், தனது மகனுடன் இணைந்து மிக்சர் கடை உரிமையாளரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த சின்னப்பன்(50) இவருக்கு திருமணமாகி சோபியா(43)என்கிற மனைவியும் கெல்வின் என்கிற மாற்றுத்திறனாளி மகனும் உள்ளனர். இவரது மனைவி சோபியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சொந்த ஊரான விருதாச்சலத்தில் வாழ்ந்து வருகிறார். சின்னப்பன்  கடந்த 10  ஆண்டுகள் முன்பு திருவள்ளுர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாகரல் பகுதியில் சொந்தமாக அடுக்குமாடி வீடு கட்டி மிக்சர்  தயாரித்து கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது  மிக்சர் தாயரிக்கும் பணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சானன் ரூட் மற்றும் மாகரல் மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் மனைவி என 2 ஊழியர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது சுபாஷ் மனைவிக்கும் மிக்சர் கடை உரிமையாளர் சின்னப்பனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு கணவனுக்கு தெரியவந்ததால் மனைவி சுபாஷ் கடந்த 6 மாதம் முன்பு வேலையில் இருந்து மனைவியை  நிறுத்தி சின்னப்பனை சுபாஷ் கண்டித்துள்ளர்.

இந்த நிலையில் நேற்று வழக்கமாக மிக்சர் வியாபாரம் முடித்து கொண்டு சின்னப்பன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது  அங்கு வந்த இருவர் வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த சின்னப்பனிடம் தகராறு செய்து தாக்கி உள்ளனர். அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வெளியே ஓடி வந்த அவரை வெளியே இருந்த மரக்கட்டைகளை கொண்டு இருவர் அவரை  அடித்து கொலை செய்து அங்கிருந்து தப்பி உள்ளனர். அப்பகுதியில்  அலறல் சத்தம் கேட்ட  அருகாமையில் தங்கிருந்த வட மாநில இளைஞர் ஒருவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் இரவு பணியில் இருந்த காவலரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சின்னப்பன் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். சின்னப்பன் கடையில் வேலை  செய்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த  பஞ்சானன் ரூட் இக்கொலைக்கு தொடர்பு இருக்கலாம் என அவரை கைது செய்து வெங்கல் காவல் நிலையம் வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர் குற்றம் செய்யவில்லை என தெரியவந்ததால், போலீசார் சின்னப்பன் செல்போன் தரவுகளை ஆய்வு செய்துள்ளனர். அதிகமாக அவர் செல்போனில் சுபாஷ்  மனைவியுடன்  பேசி இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் சுபாஷ் மனைவிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். தனது கணவர் மகன் இணைந்து அவரை அடித்து கொலை செய்ததாக  பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் பெட்டிக்கடைக்காரர் சுபாஷ் (39) 
கல்லூரி பயிலும் மகன் சக்திவேல்(18) இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை கைவிடுமாறு பல முறை கண்டித்தும் கை விடததால்  மகனுடன் இணைந்து அவரை அடித்து கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் சுபாஷ் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்,