"என் உடலுக்கு நீயே தாலி கட்ட வேண்டும்”- 8 வருட காதலை மறந்து வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்! இளம்பெண் தற்கொலை
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான இளம்பெண், தனது நீண்டகால காதலருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை அறிந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சேர்ந்த கொண்டருபாடு கிராமத்தை இளம் மென் பொறியாளர் அடங்கல்லா கீர்த்தி. இவர் தங்கூட்டூர் மண்டலம், போண்டுரு கிராமத்தைச் சேர்ந்த பாபினேனி சாய் என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கீர்த்தி மும்பையில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், சாய் துபாயில் பணிபுரிந்து வந்தார். இருவரும் சமூக ஊடகங்கள் மூலம் காதலித்து, திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் கீர்த்திக்குத் தெரிவிக்காமல் சாய் வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கீர்த்தி, மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளார். அதில், சாய் எனது உடலுக்கு இறுதி சடங்குகளை செய்து, எனக்கு தாலி கட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. கீர்த்தியின் உடலை போண்டூருக்குக் கொண்டு வந்த பெற்றோர், அவரது மரணத்திற்கு காரணமான சாய் வீட்டிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் கீர்த்தியின் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். சாய் வீட்டிற்குள் கீர்த்தியின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகினனர்.