×

சொந்த மகளையே ஆணவக் கொலை செய்த தந்தை! அதிரவைக்கும் சம்பவம்

 

ஆக்ராவில் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக ராணுவ வீரரைத் திருமணம் செய்துகொண்ட 24 வயதுப் பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெய்த்பூர் பகுதியை சேர்ந்தவர் அங்கிதா. இவரும் ராணுவ வீரருமான அமித் பச்சௌரி என்பவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, அமித் பணிக்குத் திரும்பினார். அங்கிதா தனது பெற்றோருடன் தொடர்ந்து வசித்து வந்தார். இருப்பினும் அங்கிதாவின் பெற்றோருக்கு அந்த திருமணத்தில் விருப்பமில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அங்கிதாவின் தந்தை விமல் ஷர்மா,  ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மகள் அங்கிதாவைத் தாக்கி, பின்னர் ஒரு துணியால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், 112 என்ற எண்ணிற்கு அழைத்து காவல்தறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ​​அங்கிதா பலத்த காயங்களுடன் தரையில் கிடந்தார். உடனே விமல் ஷர்மாவை கைது செய்த போலீசார், அங்கிதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.