×

23 வயது மாணவியை கொடூரமாக கொன்ற லிவ் இன் காதலன்

 

கனடாவில் பஞ்சாபைச் சேர்ந்த 23 வயது இந்திய மாணவி ஒருவர், தன்னுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இளைஞரால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதைத் தொடர்ந்து, கனடா அதிகாரிகள் கொலை வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள சம்ராலாவைச் சேர்ந்தவர் தமன்பிரீத் கவுர். இவர் உயர்கல்வியைத் தொடர, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மாணவர் விசா மூலம் கனடாவிற்கு குடிபெயர்ந்திருந்தார். தென்கிழக்கு எட்மண்டனின் சில்வர்பெர்ரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிந்துவந்த அவர், ஜூலை 9 ஆம் தேதி படுங்காயங்களுடன் அபத்தான நிலையில் வீட்டிலிருந்து மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி ஜூலை 12ஆம் தேதி உயிரிழந்தார். ஜூலை 14 அன்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், தமன்பிரீத் கவுர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார் என்பது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக, இந்தியரான 22 வயது ரித்திஷ் குமாரை கனடிய காவல்துறை கைது செய்துள்ளது. தமன்பிரீத் கவுரும், ரித்திஷ் குமாரும் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட சிறு பிரச்சனை கொலையில் முடிந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் இதுகுறித்து ரித்திஷ் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தமன்பிரீத்தின் உடலை இந்தியாவிற்குக் கொண்டுவர GoFundMe மூலம் நிதி திரட்டப்பட்டுவருகிறது.