×

“எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது”- பெண்ணை காரில் அழைத்து சென்று காதலன் செய்த கொடூரம்

 

தெலங்கானாவைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவி ஒருவர் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு உயிரிழந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.


​​நாஸ்பூரில் உள்ள சிங்கரேனி நிலக்கரிச் சுரங்கப் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளோமா படிப்பிற்காக சேர்ந்த தந்த்ரா அக்சிதரணி என்ற பெண், தனது பட்டயப் படிப்பின்போது, அங்கு விரிவுரையாளராகப் பணியாற்றிய நவீன் குமார் என்பவரை சந்தித்துள்ளார்.  இருவரும் காதலித்த நிலையில், சுரங்கப் பொறியியல் பட்டப்படிப்பைத் தொடர அக்சிதரணி ஹைதராபாத்திற்குச் சென்ற பிறகு, அவர்களுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர், சிங்கரேனி சுரங்கத்தில் பயிற்சி பெற்றபோது ரவி குமாரைச் சந்தித்துள்ளார். அக்சிதரணி தன்னை விட்டு விலகிச் சென்று ரவி குமாருடம் பழகுவதை நவீன் குமாரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 

காவல்துறையின் கூற்றுப்படி, செப்டம்பர் 12 அன்று, அக்ஷிதரணி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​எஃப்.சி.ஐ சந்திப்பு அருகே நவீன் அவரை வழிமறித்தார்.  அக்ஷிதரணியைத் தனது காரில் அழைத்துச் சென்று, ரவிக்குமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடிதம் எழுத சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதன்பின் அக்ஷிதரணி தானாகவே தற்கொலை செய்துகொண்டதாகக் குடும்பத்தினரை நம்பவைக்கும் முயற்சியில், அவரது தொலைபேசியைப் பயன்படுத்தி அக்ஷிதரணியின் தந்தையை தொடர்புகொண்ட நவீன், அக்ஷிதரணிக்கான மருத்துவ சிகிச்சையை தாமதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.  அக்ஷிதரணி செப்டம்பர் 12 அன்று கோதாவரிகானி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறை சிசிடிவி காட்சிகள், தொலைபேசி அழைப்புகள் மூலம் உண்மையை கண்டுபிடித்தது.