×

துப்பட்டாவின் ஒரு முனையை மனைவி பிடித்து இழுக்க மறுபக்கம் காதலன் பிடித்து இழுக்க கழுத்து நெரித்து கணவர் பரிதாப பலி

 

 கள்ளக்காதலனுடன் சேர்ந்து துப்பட்டாவால் கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த டியூசன் ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவரது கள்ளக்காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாக்கிநாக்கா பகுதி.  இப்பகுதியை சேர்ந்தவர் பாபு செல்வம்.   இவரது மனைவி ரிபா(42).  இத் தம்பதிக்கு 2 மகன்கள்.  ரிபா டியூசன் வகுப்பு நடத்தி வந்திருக்கிறார்.    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தன்னைவிட  12 வயது குறைந்த 30 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது .  அஜய் சவுத்ரியுடனான இந்த உறவு  பின்னர் இது கள்ள உறவாக மாறி இருக்கிறது.  இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

 இந்த கள்ளக்காதல் விவகாரம் கணவர் பாபு செல்வத்திற்கு தெரியவந்திருக்கிறது .   மனைவி கடுமையாக கண்டித்திருக்கிறார்.    அஜய் சவுத்ரியுடன் பழக கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறார் .  இதனால் அஜய் சவுத்ரியுடன் பழக முடியாமல் உல்லாசம் அனுபவிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

 இனி கணவன் உயிரோடு இருந்தால்  உல்லாசமாக இருக்க முடியாது என்று முடிவெடுத்த  அஜய் சவுத்ரியும்,  ரிபாவும்  பாபு செல்வத்தை கொலை செய்துவிட முடிவு எடுத்துள்ளனர்.   அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதியன்று இரவு பாபு செல்வம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அஜய் சவுத்ரிக்கு போன் செய்து அழைத்திருக்கிறார் ரிபா .

அவர் வந்ததும் இவர் தனது துப்பட்டாவை எடுத்து கணவர் பாபு செல்வத்தின் கழுத்தை சுற்றி வைத்துள்ளார்.  பின்னர் துப்பட்டாவின் இரு முனைகளில் ஒரு முனைய ரிபா பிடித்து இழுக்க, மறு முனையை பிடித்து இருக்க அஜய் சவுத்ரி இழுக்க,  பாபு செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

 பின்னர் அஜய் சவுத்ரியை அவரது வீட்டிற்கு அனுப்பி விட்டு ஒன்றும் தெரியாதது போல் படுத்து தூங்கி விடுகிறார் ரிபா.   இரவு பணி முடிந்து காலையில் வீட்டுக்கு வந்திருக்கிறார் பாபு செல்வத்தின் மூத்த  மகன்.  அப்போது தந்தை நெடு நேரமாக அசையாமல் கிடப்பதை கண்டு சந்தேகப்பட்ட அவர்,  அருகே சென்று தட்டி எழுப்பி இருக்கிறார்.  அவர் அசைவற்றுக் கிடந்ததுன்  உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.  அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   போலீசார் சந்தேகத்தின் பேரில் துருவித் துருவி விசாரணை நடத்தியபோது பாபு செல்வம் அதுபோல இரவில் அஜய் சவுத்ரி வீட்டிற்கு வந்து போனது தெரிய வந்திருக்கிறது.   இதன் பின்னர் மேலும் விரிவாக ரிபாவிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதில் அஜய்யுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.  இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.   திருச்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.  அஜய் சவுத்திரி, ரிபா மீதான குற்றச்சாட்டுகள் உரிமையாளர்களால் ஏற்று நீதிபதி திருச்சி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். தலா 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.