காதல் ஜோடியா? களவாணி ஜோடியா?- 9 சவரன் நகையை திருடி சொகுசு பைக் பரிசு
தந்தையின் நண்பர் வீட்டில் 9 சவரன் நகையைத் திருடி விற்று காதலனுக்கு புதிய பைக் வாங்கிக்கொடுத்த கல்லூரி மாணவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள தனது தந்தையின் நண்பர் வீட்டில் 9 சவரன் நகையைத் திருடியதாக 19 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திருடிய நகைகளை பொள்ளாச்சியில் உள்ள நகைக்கடையில் விற்று ரூ.2.5 லட்சத்திற்கு விற்று, அந்த பணத்தில் தனது காதலனுக்கு KTM பைக் வாங்கி கொடுத்துள்ளார். கல்லூரி மாணவியை சிறையில் அடைத்த போலீசார், அவரது காதலனை தேடிவருகின்றனர். திருடிய பணத்தில் பைக் வாங்கி கொடுக்கும்போது எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தில் நடந்துள்ளது. கைதான மாணவி பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல் சிஏ இரண்டாமாண்டு படித்துவருகிறார். இவர் ஆகஸ்ட் 16ஆம் தேதி தந்தையின் நண்பரான தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு சென்று, பீரோவை திறந்து 9 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போலீசார், மாணவியை கைது செய்டனர்.