×

அல்கொய்தா ஆதரவாளர்கள் 9 பேர் கைது – என்.ஐ.ஏ அதிரடி

கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் அல்கொய்தா ஆதரவாளர்கள் 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதிகளில் அல்கொய்தா அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலைகள் நடப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் அல்கொய்தா ஆதரவாளர்கள் 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. இந்த நபர்கள் அல்கொய்தா பயங்கரவாதிகளோடு சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர் என்றும், அவர்களுக்கு
 

கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் அல்கொய்தா ஆதரவாளர்கள் 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதிகளில் அல்கொய்தா அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலைகள் நடப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் அல்கொய்தா ஆதரவாளர்கள் 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

இந்த நபர்கள் அல்கொய்தா பயங்கரவாதிகளோடு சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர் என்றும், அவர்களுக்கு இந்தியாவில் சில வேலைகளை செய்து வந்ததாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர். அல்கொய்தா தீவிரவாதிகளின் தூண்டுதல் பேரில், டெல்லி உட்பட பல இடங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதும் தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து மின்னணு சாதனங்கள், ஆவணங்கள், ஜிகாதி தொடர்பான கட்டுரைகள், ஆயுதங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், வீட்டில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் சாதனங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் இந்தியாவில் நிதி திரட்டும் வேலைகளையும் செய்து வந்துள்ளனர்.

முன்கூட்டியே கைது செய்யப்பட்டதால், பயங்கரவாத தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.