×

நாகர்கோவில் அருகே 80 வயது மூதாட்டியை பலாத்காரம்- உயிருக்கு போராட்டம்

 

நாகர்கோவில் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள புத்தேரி பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.உறவினர் ஒருவர் மூதாட்டிக்கு உணவு கொடுக்க சென்றபோது  அந்த மூதாட்டி அலங்கோலமான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட உறவினர் மூதாட்டியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனையில் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது, இது குறித்து  வடசேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர், இரண்டு பேர் கொண்ட கும்பல்  இந்த வரிசையில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது இந்த நிலையில் யார் என்பது குறித்து  இதுவரைக்கும் உறுதி செய்யப்படவில்லை, இதுவரை எந்த துப்பும் கிடைக்காத நிலையில்  சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர் கஞ்சா கும்பல் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாமா என சந்தேகிக்கப்படுகிறது, நடக்க முடியாத வீட்டில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டியை  பலாத்காரம் செய்த சம்பவம் நாகநாகர்கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.