×

75 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞர்

 

குடியாத்தம் அருகே 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரவக்கல்  பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி. இவர் தனியாக வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியும் வீட்டுக்குச் சென்று அவரிடம் செலவுக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மூதாட்டி பணம் இல்லை என கூறியுள்ளார்.

இதனையத்து மூதாட்டியை அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூதாட்டி மயக்கம் அடைந்த நிலையில் மூதாட்டி இறந்து விட்டதாக நினைத்து அந்த இளைஞர் சென்றுள்ளார். இன்று காலை அவரது உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்த பொழுது காயத்துடன் மூதாட்டி இருந்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து மூதாட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது மகள் உடனடியாக அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்த அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24) என்பவரை போலீசார் தற்போது பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். 75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.