×

4 வயது குழந்தையை நாசம் செய்துகொன்ற சென்னை ராணுவ வீரர்…

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அந்தோணி நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் அந்தக் குழந்தையின் பெற்றோருடன் சேர்ந்து குழந்தையைத் தேடுவதுபோல் நடித்த கொடூர முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அந்தோணி நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். அம்பத்தூர் தொழிற்பேட்டையில்
 

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அந்தோணி நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் அந்தக் குழந்தையின் பெற்றோருடன் சேர்ந்து குழந்தையைத் தேடுவதுபோல் நடித்த கொடூர  முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அந்தோணி நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் இதே பகுதி வைஷ்ணவி நகரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மற்றும் எல்கேஜி படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் செந்தமிழ்ச்செல்வி தனது மகன் கார்முகிலனை வீட்டில் இருந்து டியூஷனுக்கு அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது வீட்டில் மகளை மட்டும் உள்ளே விட்டுவிட்டு கேட்டை பூட்டாமல் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் செந்தமிழ்ச்செல்வி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மகளை காணவில்லை. உடனே பதறிப்போய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து செந்தமிழ்ச்செல்வி திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசாரும் பொதுமக்களும் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடினர். சிலர் வீட்டுக்குள் மீண்டும் சென்று தேடிப்பார்த்தபோது பாத்ரூமில் கோணிப்பையில் போட்டு தண்ணீரில் மூழ்கடித்து சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் ஜான் சுந்தர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர். அப்போது சிறுமியின் பிறப்பு உறுப்பில் காயம் இருந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்காக உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். பலரையும் விசாரித்து வந்த நிலையில் குழந்தையின் பக்கத்து வீட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் (60) மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரை பிடித்து விசாரித்தனர். அவரது வீட்டுக்குள் சென்று சோதனையிட்டனர். அப்போது படுக்கை அறையில் குழந்தையின் உடைந்த கம்மல், தலைமுடி ஆகியவை கிடந்தது. மீனாட்சி சுந்தரத்தின் உடையிலும் ரத்தக்கறை இருந்தது. மேலும் அவரது வீட்டின் பாத்ரூமில் பினாயில் வாடையும் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் முறையான விசாரிப்பு நடத்தினர். இதில் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றதாக அவர் ஒத்துக்கொண்டார்.

இதுபற்றி கூறிய  போலீசார், ’செந்தமிழ்செல்வி மகன் முகிலனை அழைத்துக்கொண்டு டியூஷனுக்கு சென்ற நேரத்தில், வீட்டில் தனியாக குழந்தை இருப்பதை மீனாட்சி சுந்தரம் தெரிந்து கொண்டார். இவர் குழந்தைக்கு ஒருவகையில் தூரத்து உறவினரும் கூட. அவரை அந்த சிறுமி தாத்தா, தாத்தா என்றுதான் அழைக்கும். வீட்டுக்குள் சென்ற மீனாட்சி சுந்தரம், விளையாடலாம் வா என்று குழந்தையை தன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.பிறகு தனது படுக்கை அறையில் வைத்து குழந்தையை மூர்க்கத்தனமாக பலாத்காரம் செய்துள்ளார். இதில் குழந்தை இறந்தாள். உடனே குழந்தையின் சடலத்தை அவரது பாத்ரூமுக்கு எடுத்துச்சென்று கோணிப்பையில் கட்டி வைத்தார். இதற்குள் செந்தமிழ்செல்வி வீட்டுக்கு திரும்பி மகளை காணாமல் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் குழந்தையின் சடலம் உள்ள கோணிப்பையை எடுத்து, செந்தமிழ்செல்வியின் வீட்டுக்குள் சென்று பாத்ரூமில் போட்டுவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல் வந்துள்ளார். குழந்தையை தீவிரமாக தேடுவது போலவும் காட்டிக்கொண்டார். குழந்தையை பலாத்காரம் செய்து மீனாட்சிசுந்தரம் கொன்ற சமயத்தில் அவரது மனைவியும் வீட்டில் இருந்துள்ளார். வயதான அவருக்கு இது எதுவுமே தெரியாமல் இருந்துள்ளது. கடைசியில் போலீஸார் விசாரணையில் மீனாட்சி சுந்தரம் சிக்கிக் கொண்டார்’என்று தெரிவித்தனர்.