×

ஓயாமல் ஓரினச்சேர்க்கை தொல்லை- ஆட்டோ ஓட்டுநரை அடித்து கொன்ற 4 சிறுவர்கள்

 

ஆண்டிப்பட்டி அருகே அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்தனர்.


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அதே ஊரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தங்கமலை 43 என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் நிர்வாணமாக கிடந்தார். பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவரின் உடலை மீட்ட ராஜதானி போலீசார் அந்த பகுதிகளில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் இறந்த தங்கம்மலையின் செல்போன் அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களை வைத்து கொலை குற்றவாளிகளை தேடிவந்த நிலையில்  விசாரணையில்  தெப்பம்பட்டியை சேர்ந்த அஜித்குமார் 27 வயது மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த அபிஷேக்குமார் (14), விமல் (12), அறிவழகன் (15), செல்வ முருகன் (16) ஆகிய 4 சிறுவர்கள் சேர்ந்து மொத்தம் 5 பேரும் தங்கமலையை அடித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

இதனை தொடர்ந்து அஜித் குமார் மற்றும் 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த தங்கமலை அதே பகுதியை சேர்ந்த பல சிறுவர்களிடம் பணம் கொடுத்து தவறாக நடந்து கொண்டதாகவும், இதுகுறித்து சிறுவர்கள் அஜித் குமாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அஜித் குமார் மற்றும் நான்கு சிறுவர்களும் சேர்ந்து கடந்த சில வாரங்களாக ஆட்டோ டிரைவர் தங்கமலையை கண்காணித்து வந்துள்ளனர். சம்பவநாளன்று ஆட்டோ டிரைவர் தங்கமலை அரசு பள்ளி வளாகத்தில் ஒரு சிறுவனிடம் நடந்து கொண்டதை பார்த்த ஐந்து பேரும் ஆத்திரத்தில் அங்கு கிடந்த தென்னை மட்டை உள்ளிட்ட கம்புகளை பயன்படுத்தி தங்கமலையை தாக்கியுள்ளனர்.  இதில் படுகாயமடைந்த தங்கமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.  இதனால் பயந்து போன 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்

இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்ட எஸ்பி சினேக பிரியா உத்தரவின்படி ஆண்டிப்பட்டி துணை சூப்பிரண்டு சிவசுப்பு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ஆகியோர் இணைந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் ஒரு வாலிபர் உள்ளிட்ட 5 சிறுவர்கள் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.