×

சாராய வேட்டையில் ரூ.8.5 லட்சம் பணத்தை திருடிய போலீசார்… சாட்டையை சுழற்றிய எஸ்.பி!

ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதைத் தடுக்க போலீசார் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் உள்ள நச்சுமேடு மலைகிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கு சென்ற போலீசார் அங்கிருந்த சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்து அவர்கள் இருவரும் அங்கிருந்து எஸ்கேப் ஆனதால்
 

ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதைத் தடுக்க போலீசார் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் உள்ள நச்சுமேடு மலைகிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பேரில், இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கு சென்ற போலீசார் அங்கிருந்த சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்து அவர்கள் இருவரும் அங்கிருந்து எஸ்கேப் ஆனதால் போலீசார் புறப்பட்டுள்ளனர். இதனிடையே, சாராய வேட்டைக்கு சென்ற காவலர்கள் செல்வம் மற்றும் இளங்கோ வீட்டில் பீரோவை உடைத்து ரூ.8.5 லட்சம் பணம், 15 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய போது கிராம மக்கள் அவர்களை பிடித்துள்ளனர். அச்சமயம் பகாயம் ஆய்வாளர் சுபாவும் சம்பவ இடத்திற்கு வந்ததால் காவலர்கள் மூவரும் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பூட்டிய வீட்டில் பணம் திருடிய எஸ்.ஐ உட்பட 3 போலீசார் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக வேலூர் எஸ்.பி செல்வகுமார் அறிவித்துள்ளார். பணத்தை திருடிய காவலர்கள் அரியூர் உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.