×

மதபோதகரின் லீலைகள்: வெளிச்சத்துக்கு கொண்டு வரும் 2வது மனைவி

கன்னியாகுமரியில் கருங்கல் அடுத்த இலவுவிளையில் திருவரம்பு கல்வாரி பேப்டிஸ்ட் திருச்சபையில் தலைமை போதகராகவும், மருத்துவராக இருக்கிறார் ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ். இவர் முகநூல் மூலமாக பெண்களை வளைத்து அவர்களுடன் உல்லாசமாக இருப்பதாக முகநூல் மூலமாக காதலித்து பணத்தையும், நகையையும் இழந்த 2வது மனைவி நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து ஆண்ட்ரூ பிரவீன் சதீஷும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகிவிட்டனர். தூத்துக்குடி குலசேகரபட்டினத்தை சேர்ந்த ஜான்சிராணி பி.எஸ்.சி. முடித்துவிட்டு 2010 முதல் 2018 வரையிலும் மொரிஷியஸில் உள்ள மருத்துவமனையில் வேலைசெய்து வந்துள்ளார்.
 

கன்னியாகுமரியில் கருங்கல் அடுத்த இலவுவிளையில் திருவரம்பு கல்வாரி பேப்டிஸ்ட் திருச்சபையில் தலைமை போதகராகவும், மருத்துவராக இருக்கிறார் ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ்.

இவர் முகநூல் மூலமாக பெண்களை வளைத்து அவர்களுடன் உல்லாசமாக இருப்பதாக முகநூல் மூலமாக காதலித்து பணத்தையும், நகையையும் இழந்த 2வது மனைவி நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து ஆண்ட்ரூ பிரவீன் சதீஷும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகிவிட்டனர்.

தூத்துக்குடி குலசேகரபட்டினத்தை சேர்ந்த ஜான்சிராணி பி.எஸ்.சி. முடித்துவிட்டு 2010 முதல் 2018 வரையிலும் மொரிஷியஸில் உள்ள மருத்துவமனையில் வேலைசெய்து வந்துள்ளார். இவருக்கு ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ் முகநூல் மூலமாக நட்பாகியுள்ளார். நாளடைவில் காதலர்களாகி கல்யாணமும் நடந்துவிட்டது.

2018ல் தேவாலயத்தில் மோதிரம் மாற்றிக்கொண்ட இவர்கள், 2019ல் சென்னை மெரியமேட்டில் சார்பதிவாளர் அலுவலத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

இந்த நிலையில்தான் ஆண்ட்ரூவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பதும் அவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது. மேலும், ஆண்ட்ரூவுக்கு பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பதும் தெரியவந்தது. பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோவும் போட்டோக்களும் ஜான்சிராணியிடம் சிக்கின.

தனது தந்தையிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் வரதட்சணையாக பெற்றது மட்டுமல்லாமல், மருத்துவமனையை டெவலப் செய்ய வேண்டும் என்று தன்னிடம் இருந்து 80 லட்சம் ரூபாய் பணமும், 40 பவுன் நகைகளும் பெற்றது பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்குத்தானா என்று நினைத்த ஜான்சிராணி, தான் ஏமாந்துவிட்டதை உணர்ந்து, குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் இரணியல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜான்சிராணி. புகாரின் பேரில் உள்ள உண்மை விபரத்தினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதை அடுத்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், ஆண்ட்ரு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் 15 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தகவலறிந்து ஆண்டுரூவும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தான் ஒரு பெண்ணுடன் இருக்கும் வீடியோவை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறா. அந்த வீடியோவில் அவர் கதறி அழுதிருக்கிறார்.