×

பெண்ணைக் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் கைது!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கோர்பா மாவட்டத்தில் 32 வயது நபர் ஒருவர் 27 வயது பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பையா லால் என்பவரையும் அவருக்கு பெண்ணைக் கடத்த உதவியாக இருந்த மேலும் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இயற்கை உபாதைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வந்த பெண்ணை ஜூன் 19-ஆம் தேதி இரவு அந்த கும்பல் கடத்தி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பையாலால் மற்றும் ஹர்தயாள் போர்டே இருவரும்சேர்ந்து அந்த
 

சத்தீஸ்கர் மாநிலத்தில் கோர்பா மாவட்டத்தில் 32 வயது நபர் ஒருவர் 27 வயது பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பையா லால் என்பவரையும் அவருக்கு பெண்ணைக் கடத்த உதவியாக இருந்த மேலும் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இயற்கை உபாதைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வந்த பெண்ணை ஜூன் 19-ஆம் தேதி இரவு அந்த கும்பல் கடத்தி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பையாலால் மற்றும் ஹர்தயாள் போர்டே இருவரும்சேர்ந்து அந்த பெண்ணை அருகிலுள்ள காட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் பையாலால் அந்த பெண்ணை தனது உறவினர் வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர் பையனால் மேலும் இரு தினங்களுக்கு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அந்தப் பெண் தனது குடும்பத்தை தொடர்புகொண்டு நடந்த சம்பவம் பற்றித் தெரிவித்துள்ளார். பின்னர் பெண்ணின் தந்தையும் அவரது சகோதரர்களும் அந்த இடத்தை அடைந்து பெண்ணை மீட்டுள்ளனர். பெண்ணைக் கடத்திய மூவரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.