×

பைக் பறிமுதல்… காவலர்களுடன் வாக்குவாதம்!-உயிரை மாய்த்துக் கொண்ட திருநங்கை சபீனா

ஊரடங்கின்போது வெளியே சுற்றிய திருநங்கையின் பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் மனவேதனையடைந்த திருநங்கை தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் திருநங்கை சபீனா. 19 வயதான இவர், கடந்த விழாயக்கிழமை இரவு தனது நண்பர் சபீகாவுடன் இரு சக்கர வாகனத்தில் வள்ளூவர் கோட்டம் அருகே சென்றுள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சபீனாவை பிடித்தனர். ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றுவதாகக்கூறி சபீனாவின் இருசக்கர வாகனத்தை பறிமுதல்
 

ஊரடங்கின்போது வெளியே சுற்றிய திருநங்கையின் பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் மனவேதனையடைந்த திருநங்கை தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் திருநங்கை சபீனா. 19 வயதான இவர், கடந்த விழாயக்கிழமை இரவு தனது நண்பர் சபீகாவுடன் இரு சக்கர வாகனத்தில் வள்ளூவர் கோட்டம் அருகே சென்றுள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சபீனாவை பிடித்தனர். ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றுவதாகக்கூறி சபீனாவின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதனால் சபீனா, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பைக்கை கொடுக்க மறுத்த காவல்துறையினர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரும்படி கூறியுள்ளனர். இதையடுத்து, சபீனா, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போதும், காவல்துறையினருக்கும் சபீனாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள், சபீனா கையில் அணிந்திருந்த வளையல் மற்றும் பொருள்களை உடைத்ததாக தெரிகிறது.

இந்த பிரச்னைக்கிடையே பைக்கை வாங்கிக் கொண்டு சபீனா, கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மாடியில் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சபீனாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற கோடம்பாக்கம் காவல்துறையினர், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

சபீனா உயிரிழந்ததைத் தொடர்ந்து சக திருநங்கைகள் கோடம்பாக்கம் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

சபீனாவுடன் காவல்துறையினர் எந்த தகராறிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் ஏன் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.