×

பாசத்தை காட்டி அழைத்துச் சென்று பாதிவழி்யில் தங்கையை கொன்று புதைத்த அண்ணன்கள்!

சாந்தினியும்(23) அர்ஜூன்குமாரும்(25) காதலித்து வந்தது சாந்தியினின் சாதியினருக்கு பிடிக்கவில்லை. இதனால் சாந்தியின் குடும்பத்தினரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அர்ஜூனைத்தான் கல்யாணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தார் சாந்தினி. நீ தலித் பையனை கல்யாணம் செய்துகொண்டால் நாங்க வெளியே தலையை காட்ட முடியாது. இந்த ஊரில் வாழவே முடியாது என்று எச்சரித்தனர் அண்ணன்கள். எதிர்ப்புகள் அதிகமாகவே, வேறு வழியின்றி, வீட்டை விட்டு வெளியேறி, உத்தரபிரதேசத்தின் மெயின்பூர் மாவட்டத்தை விட்டு அர்ஜூனுடன் டெல்லிக்கு சென்றார் சாந்தினி. டெல்லியில் இருவரும்
 

சாந்தினியும்(23) அர்ஜூன்குமாரும்(25) காதலித்து வந்தது சாந்தியினின் சாதியினருக்கு பிடிக்கவில்லை. இதனால் சாந்தியின் குடும்பத்தினரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அர்ஜூனைத்தான் கல்யாணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தார் சாந்தினி.

நீ தலித் பையனை கல்யாணம் செய்துகொண்டால் நாங்க வெளியே தலையை காட்ட முடியாது. இந்த ஊரில் வாழவே முடியாது என்று எச்சரித்தனர் அண்ணன்கள்.

எதிர்ப்புகள் அதிகமாகவே, வேறு வழியின்றி, வீட்டை விட்டு வெளியேறி, உத்தரபிரதேசத்தின் மெயின்பூர் மாவட்டத்தை விட்டு அர்ஜூனுடன் டெல்லிக்கு சென்றார் சாந்தினி.

டெல்லியில் இருவரும் கல்யாணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தனர். டெல்லியில் திரிலோக்புரி பகுதியில் வசித்து வந்தது அவரது சகோதரர்களூக்கு தெரியவந்ததும், சாந்தியின் செல்போன் நெம்பரை வாங்கி அண்ணன்கள் பேசினர். பிரிவுதுயரத்தை சொல்லி பாசமழை பொழி்ந்தனர் அண்ணன்கள். அந்த பாசத்தை உண்மை என்று நம்பிய அப்பாவி சாந்தினி, டெல்லியில் தான் இருக்கும் இடத்தை சொல்லி வாங்க என்று அழைத்தார்.

உபியில் இருந்து டெல்லி வந்த அண்ணன்கள் தங்கை வீட்டில் வயிறார சாப்பிட்டுவிட்டு, அம்மா, அப்பா உன்னை பார்காம தவிக்கிறாங்க என்று சொன்னதும், அதை உண்மை என்று நம்பி, அம்மா, அப்பாவை பார்த்து பேசிவிட்டு வந்துவிடுகிறேன் என்றூ கணவனிடம் சொல்லிவிட்டு சென்றார் சாந்தினி.

கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி டெல்லியில் இருந்து சென்ற சாந்தினி, 20ம் தேதி போன் செய்து, சொந்தக்காரங்க எல்லோரும் என்னை அடிக்குறாங்க. திட்டுறாங்க., இனிமே நான் டெல்லிக்கு வரமாட்டேன் என்று அர்ஜுனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சாந்தியின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. அதன்பிறகு அர்ஜூன் பலமுறை முயன்றும் பேசமுடியவில்லை.

விசாரித்த பார்த்தபோது சாந்தியும் ஊரில் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ஜூன், நவம்பர் 22ம் தேதி மயூர் விஹார் போலீசில் புகார் கொடுத்தார். சாந்தினி அண்ணன்களிடம் போலீசார் விசாரித்தபோது, எங்களுடன் ஊருக்கு வந்தார் சாந்தினி. ஆனால், ஊர் எல்லைக்கு வந்ததும், வீட்டுக்கு வர விருப்பமில்லை என்று கூறிவிட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பிவிட்டார் என்று சொன்னார்கள்.

இதில் சந்தேகம் அடைந்த அர்ஜூன், போலீசிடம் வற்புறுத்தி விசாரிக்கச்சொன்னதில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் விருப்பத்தின் படி தங்கையை கொன்று ஊருக்கு வெளியே உள்ள வயலில் புதைத்துவிட்டதாக போனில் தெரிவித்தனர்.

இதைக்கேட்ட அர்ஜூன் அலறித்துடித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்துவிட்டதை தெரிந்துகொண்ட அண்ணன்கள் தலைமறைவாக இருக்கிறார்கள்.