×

18 வயது மகனுக்கு 25 வயது பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்த தந்தை! கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்திய தாய்!

வேலூர் அரியூரை சேர்ந்த பெரும் செல்வந்தர் ஒருவரின் 25 வயது மகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது தாய் வீட்டில் வந்து தஞ்சம் அடைந்துள்ளார். தனது மகளுக்கு அழகான மணமகனைத் தேடி கண்டுபிடித்து இரண்டாவது திருமணம் செய்து வைப்பேன் என்று அந்தப் பெண்ணின் தந்தை முன்னாள் கணவரின் குடும்பத்தினரிடம் சவால் விடுத்துள்ளார். அதனால்
 

வேலூர் அரியூரை சேர்ந்த பெரும் செல்வந்தர் ஒருவரின் 25 வயது மகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது தாய் வீட்டில் வந்து தஞ்சம் அடைந்துள்ளார். தனது மகளுக்கு அழகான மணமகனைத் தேடி கண்டுபிடித்து இரண்டாவது திருமணம் செய்து வைப்பேன் என்று அந்தப் பெண்ணின் தந்தை முன்னாள் கணவரின் குடும்பத்தினரிடம் சவால் விடுத்துள்ளார். அதனால் மாப்பிள்ளை பார்க்கும் பணிகளில் வேகம் காட்டி வந்துள்ளார். மேலும் தனது நண்பர்களிடம் எனது மகளை திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள், பல லட்சம் மதிப்புள்ள சொத்துகள் வழங்கப்பட இருப்பதாக கூறியுள்ளார்.


இதைக் கேட்ட அந்த செல்வந்தரின் நண்பர் ஒருவர் கார் மற்றும் சொத்துக்கு ஆசைப்பட்டு கல்லூரியில் படித்துவரும் தனது 18 வயது மகனை அந்த 25 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தனது நண்பரிடம் விருப்பம் தெரிவிக்க மணமகள் வீட்டார் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த இளைஞரின் தாயோ இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் அதையும் மீறி நிச்சயதார்த்தத்தை ரகசியமாக நடத்தி முடித்த அவரின் கணவர் திருமண ஏற்பாடுகளையும் துரிதமாக செய்து வந்துள்ளார். மேலும் வரதட்சணையாக கொடுக்க உள்ள கார் வாங்கும் பணிகளும் முடிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞரின் தாயார் சமூகநலத் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மணமகளின் வீட்டுக்கு போலீசாருடன் சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் ஆணின் திருமண வயது 21 என்றும் 18 வயதில் அந்த இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தால் மணமகள் மற்றும் மணமகனின் குடும்பத்தினர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தனர். இதனால் திருமண ஏற்பாடு நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.