×

நண்பர் கடனுக்கு ஜாமீன் கொடுத்த இளைஞர் தீக்குளித்து உயிருக்கு போராட்டம்

நண்பர் கடனுக்கு ஜாமீன் கொடுத்ததால் சிக்களில் சிக்கிய இளைஞர் மன உளைச்சலில் தீக்குளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த பரிதாபம். பரமக்குடியில் அரிசிக்கடை நடத்தி வரும் பிரசன்னா(வயது30)விடம் தனக்கு கஷ்டமான சூழ்நிலை என்றும், பண உதவி வேண்டும் என்றும் கேட்ட நண்பருக்கு, தனக்கு தெரிந்தவரிடம் சொல்லி 2 லட்சம் கடன் வாங்கி கொடுத்திருக்கிறார். கடன் வாங்கியவர் சரியாக கடனை திருப்பி செலுத்தாததால், ஜாமீன் கொடுத்த பிரசன்னாவை நெருக்கி இருக்கிறார் கடன் கொடுத்தவர். இந்த நெருக்கடி
 

நண்பர் கடனுக்கு ஜாமீன் கொடுத்ததால் சிக்களில் சிக்கிய இளைஞர் மன உளைச்சலில் தீக்குளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த பரிதாபம்.

பரமக்குடியில் அரிசிக்கடை நடத்தி வரும் பிரசன்னா(வயது30)விடம் தனக்கு கஷ்டமான சூழ்நிலை என்றும், பண உதவி வேண்டும் என்றும் கேட்ட நண்பருக்கு, தனக்கு தெரிந்தவரிடம் சொல்லி 2 லட்சம் கடன் வாங்கி கொடுத்திருக்கிறார். கடன் வாங்கியவர் சரியாக கடனை திருப்பி செலுத்தாததால், ஜாமீன் கொடுத்த பிரசன்னாவை நெருக்கி இருக்கிறார் கடன் கொடுத்தவர்.

இந்த நெருக்கடி அதிகமாகி தினம் தினம் அதிகமானதால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார் பிரச்சன்னார்.

கடன் வாங்கிய நண்பரும் பணத்தை திருப்பி செலுத்தாததால், தானே கடனை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாலும் பெட்ரோல் பங்கில் சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கிச்சென்று வைகை ஆற்றங்கரையோரம் சென்று உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். உடல் முழுவதும் எரிந்ததும் வலி தாங்க முடியாமல் ஆற்றுக்குள் குதித்திருக்கிறார்.

பின்னர் கரையேறிய பிரசன்னா, உடல் முழுவதும் வெந்த நிலையில் செல்போனை எடுத்து போலீசுக்கு போன் செய்துள்ளார். போலீசார் வந்து பிரச்சன்னாவை பரமக்குடி மருத்துவமனை கொண்டு செல்ல, தீக்காயம் 90 சதவிகிதம் இருப்பதால் மதுரை மருத்துவமனை கொண்டு செல்லுமாறு சொல்லிவிட்டனர்.

இதன்பின்னர் பிரச்சன்னா மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் பிரசன்னா.