×

தாயின் உடலை வீட்டு முன் புதைக்க முற்பட்ட மகன்! வருத்தம் தெரிவித்த வட்டாட்சியர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் வசித்து வந்த செல்லாயி(வயது70) உடல்நலக்குறைவினால் நேற்று காலமானார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. சடலத்தை இடுகாட்டிற்கு கொண்டு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், தன் வீட்டின் முன்பே புதைப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார் செல்லாயி மகன் ராஜகுரு. உறவினர்களும் அதுதான் சரி என்று அவருக்கு ஆதரவாக நின்று அடக்கம் செய குழு வெட்டினர். சம்பவத்தினை கேள்விப்பட்ட ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி, டிஎஸ்பி வந்து ராஜகுரு மற்றும்
 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் வசித்து வந்த செல்லாயி(வயது70) உடல்நலக்குறைவினால் நேற்று காலமானார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது.

சடலத்தை இடுகாட்டிற்கு கொண்டு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், தன் வீட்டின் முன்பே புதைப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார் செல்லாயி மகன் ராஜகுரு. உறவினர்களும் அதுதான் சரி என்று அவருக்கு ஆதரவாக நின்று அடக்கம் செய குழு வெட்டினர்.

சம்பவத்தினை கேள்விப்பட்ட ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி, டிஎஸ்பி வந்து ராஜகுரு மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கணேசன் என்பவர் இடுகாட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனால் ராஜகுருவிடம் வருத்தம் தெரிவித்த வட்டாட்சியர், கணேசனிடம் பேசி ஆக்கிரமிப்பை அகற்ற வழி செய்கிறேன் என்று வட்டாட்சியர் உறுதி அளித்தார். மேலும், அந்த ஆக்கிரமிப்பு வழியாகவே செல்லாயி உடலை கொண்டு செல்லவும் வழி வகை செய்தார் வட்டாட்சியர்.

சேந்தன்குடியில் நடந்த இந்த சம்பவத்தினால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.